பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தது. வர வர விளக்கு ஒளியும் பேச்சு ஒலியும் சபீபித்தன. அதைக் கண்ட ராஜம், மனத்துக்குள் கடவுளே! என்ருள். அச்சுதன், இதென்ன இழவு " என்று கிகைத்து கின்றன். 翻 腦 领 45. வினையும் -ளேவும் தமையனின் உத்தரவுப்படி ப்ம்பாயிலிருந்து சென்னே திரும்பிய பாஸ்கரன் நேரே பூரீநிவாசனின் வீட்டுக்குத்தான் சென் ஆறன். அவன் அங்கு இல்லை. ருக்மிணியை விசாரித்தான். பூநீகி வாசன் வெளியூரிலிருந்து வந்துவிட்டதாகவும், வந்தது முதல் பைத் கியம் பிடித்தாற்போலப் பரபரவென்று இங்கும் அங்கும் அலேந்து கொண்டிருப்பதாகவும் உடம்பு இளைத்துத் துரும்பாய்ப் போயி ருப்பதாகவும் எல்லாம் சேர்ந்து தனக்குப் பெரிதும் கவலையை அளிப்பதாகவும் அவள் தெரிவித்தாள். கவலேப்படவேண்டாம் என்று அவளுக்குத் தேறுதல் பல கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிய பாஸ்கரன் சுலோசனவின் வீட்டை நோக்கி வேகமாக நடந்தான். வீட்டைச் சமீபித்தபோது உள்ளிருந்து ஒரே கூச்சலும் கடக் குரலுமாகக் கேட்டன. விஷயம் புரியாமல் வாசம்படியோரமாகத் தயங்கி கின்றன் பாஸ்கரன். பூநீதிவாசன், சுலோசன இருவர் குரல்களும் தெளிவாகக் கேட்டன. ஒருவரை ஒருவர் குற்றஞ் சாட்டி வாய்க்கு வந்தபடி ஏசிக்கொண்டனர். இடையிடையே மூன்ருவதாக ஒரு பெண் குரலும் கேட்டது. அந்தக் குரல் ஏற் கனவே எங்கோ கேட்டுப் பரிசயம் உள்ளதுபோல் தோன் றிற்று பாஸ்கானுக்கு. நடு நடுவே சிறுவர் சிறுமியர் சிணுங்கு வதும் விம்மி அழுவதும் கேட்டன. இத்தனேக்கும் மேலாக முரட் மித்தனமான ஆண் குரல்களும் ஒலித்தன. - பாஸ்கரன் கடையைக் கடந்துசென்று மெல்ல உள்ளே எட் டிப் பார்த்தான். அடுத்த நிமிஷம் தன்னே மறந்து 'ஆ' என்று கூவிவிட்டான். நல்ல வேளேயாக உள்ளே இருந்த அமர்க்களத் தில் அவன் கூவியதை யாரும் கவனிக்கவில்லை. அங்கே தென் பட்ட காட்சி பாஸ்கர&னக் கதிகலங்கச் செய்வதாயிருந்தது. கூடத்திலே பூரீநிவாசன் தலைவிரிகோலமாக கின்று கொண் டிருந்தான். அவன் எதிரே சற்றுத் தொலைவில் சுலோசகு கின்றுகொண்டிருந்தாள். இருவர் அருகிலும் இரண்டிாண்டு போலீஸ் சேவகர்கள் கின்றுகொண்டிருந்தார்கள். சற்றுத் தொலே வில் லட்சுமி சுவரோடு சாய்ந்து உட்கார்ந்து கண்ணிர் வடித்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் அவள் பெண்ணும் பிள் 8ளயும் கின்று கொண்டிருந்தார்கள். கூடத்திலே என்ன என்ன வோ சாமான்கள் இறைந்துகிடந்தன. -