பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சட்டம் இடுகிறன். அப்படிப்பட்டவன் இப்படிக் கொஞ்சங்கட்ட ஆய்ந்தோய்ந்து பாராமல் ஒரு காரியத்தைச் செய்தானே! அதைச் சொல்' - - 'அந்தப் பிள்ளை ரமணிக்குந்தான் ஆகட்டும், இத்தனே வேண்டாம். பாழாய்ப்போன பட்டனவாசமும் படிப்பும் அல்லவா அவனே இப்படி ஆக்கிவிட்டன! இல்லாவிட்டால்கிராமத்தோடே கிடந்திருந்தால்-இந்தப் பெண் ராஜத்தைச் சுற்றிச் சுற்றி ஆந்து கொண்டிருக்கமாட்டான? அது வாஸ்தவம். பெண் என்ருலும் சொன்ன வாயும் விலைபெறும். பத்தாைமாற்றுப் பொன் மாதிரி சரீரம். களே சொட்டும் முகமும் அடக்க ஒடுக்கமான நல்ல குணங்களும் அடே யப்பா! சாமான்யமான பெண்ணு அவள்? வீட்டுக்கு விளக்கே வேண்டாமே!...... ஹ-ம்! அவன் கொடுத்து வைக்கவில்லை.”

  • எல்லாம் அந்தக் குடிகேடி லட்சுமியின் வயிற்றெரிச்சல் செய்த வேலேதான். அவள் கண்னும் பார்வையும் தெறிப்பான பேச்சும், அப்பா! பெரிய ராட்சசி இல்லையா அவள்? ஏதாவது பார்வை கீர்வை பார்த்து விட்டாளோ என்னவோ!'

': அதெல்லாம் இல்லை. அந்தப் பிள்ளைக்கு நன்ருகத் தூபம் போட்டுவிட்டாள்; அவன் கட்டைத் தறித்துக்கொண்டு ஓடிப்போய் விட்டான்.' - 'இவள் ஏதுக்குத் தூபம் போடுகிருள்?" ‘தெரியாதா விஷயம்? அவள் உடன் பிறந்தவன் பெண்ணே அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்துவிட வேண்டுமென்று ஆதியிலிருந்து ஒரு காலால் கின்ருள். அது பலிக்கவில்லை. அந்தக் கொடுமைதான்.' . . - - "இதெல்லாம் என் வீண் பேச்சு? ஒருத்தரைச் சொல்லுகிற தில் பிரயோசனம் இல்லை - எல்லாம் அந்தப் பெண் ராஜத்தின் அகிருஷ்டந்தான். அதன் தலையிலே சுகம் என்கிற எழுத்துக் களே இல்லை. இல்லாவிட்டால் பிறந்த உடனே தாயை விழுங்கு வானேன்? தகப்பன் இப்படி தறுதலையாகி ஜெயிலிலே அடைந்து கிடப்பானேன்? எதோ ரத்த பாசத்தில்ை சுந்தரேசன் ஒரு நல்ல காரியத்தைச் செய்து வைத்தால் அதுவும் இப்படி அலங்கோலம் ஆவானேன்? கஷ்டப்பட என்று பிறந்தது; கஷ்டப்பட்டாய் விட்டது; அதன் கதை முடியப் போகிறது! - அவ்வளவுதான?"