பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 துடன் பதில் சொன்னுன் பாஸ்கரன். சரிதான். அண்ணன் தம்பி சமாசாரம். அவர்களுக்குள் ஆயிரம் இருக்கும்' என்று சொல்விக்கொண்டே அவர்கள் சென்ருர்கள். . பூநீநிவாசன் அன்பு, மரியாதை எதுவுமின்றித் தன்னைக் கழுத் தைப் பிடித்துத் தெருவிலே தள்ளிக் கதவைச் சாத்திக்கொண்டு: போனதைப்பற்றி ஒரு சிறிது கூட வருந்தவில்ல்ே வாஸ்கரன். மேலே என்ன செய்வது என்பது பற்றித்தான் தீவிரம்ாக எண்ண மிட்டது அவன் உள்ளம். உாலுக்கு ஒருபுறம் இடி; மத்தளத்துக்கு இருபுறமும் இடி என்பதுபோலக் கிருஷ்ணராஜபுரத்தில் நிகழ்ந் ததை நீகிவாசனிடம் சொல்லி அத்ற்குப் பரிகாரம் தேடலாம் என்று ஓடோடியும் வந்தவனுக்கு இங்கே உள்ள கிலேமை மிகுந்த கவலேயை உண்டு பண்ணுவதாக இருந்தது. கிருஷ்ணராஜபுரத்து விஷயத்தையே தல்ேபோகிற காரியமாக கினேத்தவனுக்கு இப் போது அதைவிட இதுவே பெரிதாகத் தோன்றிற்று. ராஜம் கிச்சயமாக ருக்மிணியுடன் புகலூர் செல்லவிலலை என்பது தெரிந்து போய்விட்டது. அவள் கிளம்பிச் சென்ற பிறகும் இங்கே இவள் இருந்திருக்கிருள் என்பதும் ஒரளவு புலப்பட்டது. தனித்து எத்தனே நாள் இருந்தாள். பிறகு ஏன் நீகில்ாசனுக்குத் தெரியாமல் கிளம்பிச் சென்ருள்? எங்கே சென்றிருப்பாள் கிருஷ்ணராஜபுரம் போயிருப்பாளோ ? . ‘ராஜத்துக்கு அக்த, ஒரிடம் தவிர வேறு புகலிடே ஏது? ஐயோ! அங்கே இப்போது போனுல் இவளுக்கு எப்படிப்பட்ட வரவேற்புக் கிடைக்கும்? பெரிய மன்னி வாயால் கொட்டி வண் டாகப் பறப்பாளே! பூநீநிவாசனவது நம்மை வெறுமனே கழுத் தைப் பிடித்துத் தெருவிலே தள்ளினுன், மன்னியோ தின் பரம வைரியான ராஜத்தை, அதுவும் இந்த அவகேடான சந்தர்ப் பத்தில் நையப் புடைத்து அல்லவேர் கழுத்தைப்பிடித்துத் தள்ளு வாள்? நிச்சயம் அங்கே அதுதான் நடக்கும். அப்புறம்? அப் புறம் அந்தப் பேதை எங்கே செல்வாள்? ஐயோ ராஜம் ராஜம்! நீ ஏன் பெண்ணுய்ப் பிறந்தாய்? அதுவும் பாக்கியத்தின் பெண் கை ஏன் பிறந்தாய்? பிறந்த நாள் முதல் கஷ்டத்தை அன்றி வேறு எதையும் அறியாத நீ மேலும் கஷ்டத்தை உரமிட்டு வளர்க் கிற முறையிலே ஏன் ரமணிக்குக் கழுத்தை நீட்டிய்ை? யாராவது ஒரு பரதேசியின் கையைப் பிடித்திருந்தால்கட்ட இசக்துண்டு சுகமாக வாழ வகை உண்டே ராஜம் ராஜம்!...” - - - - - உணர்ச்சி வசமாகிவிட்ட அவன் உள்ளம் உடைப்பெடுத்தது. அதன் விளேவாகக் கண்கள் கலங்கின. நீர் முட்டிற்று. அதைத் துடைக்கத் துண்டைக் கண்ணண்டை கொண்டுபோனன். அப் படியே துண்டால் முகத்தை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி