பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

எஸ். எம். கமால்

கொண்டு கிளர்ச்சிக்காரர்களை நெருக்கி வளைத்தன.[1] சிங்கன் செட்டியும் இன்னும் சிலரும் அங்கு நடந்த போராட்டத்தில் தியாகிகள் ஆயினர். கிளர்ச்சிக்காரர்களான தேவர்களும், சேர்வைக்காரர்களும் சிதறியோடினர். மயிலப்பனும் அவருடன் நின்று போரிட்ட முப்பது பேர்களைக் கொண்ட அணி கிழக்கில் காக்கூரை நோக்கி பின்வாங்கியது, இந்தப் போரில் கும்பெனியாருக்கு பக்கபலமாக பெரிய மருதுவின் மகன் தலைமையில் போரிட்ட சிவகங்கை அணியை கும்பெனியார் பிறகு பாராட்டி தங்கப்பதக்கம் வழங்கினர்.

மறவர் சீமையில் சேதுபதி மன்னருக்கு இழைக்கப்பட்ட கும்பெனியாரது கொடுமைக்கு எதிராக கிளர்ந்து எழுந்த மக்கள் எழுச்சி நாற்பத்து இரண்டு நாட்கள் நீடித்து வரலாறு படைத்தது. சொக்கப்பனை போல் சுடர்விட்டு எரிந்த மக்களது ஆவேசம், மோசமான அடக்கு முறையினாலும் சிவகங்கை சீமை சேர்வைக்காரர் துரோகத்தினாலும் ஒடுக்கப்பட்டு ஓய்ந்தது. போரில் கொல்லப்பட்ட கிளர்ச்சிக்காரர்கள் சிலரது தலைகளை கும்பெனியார் நீண்ட ஈட்டி நுனிகளில் சொருகி பல கிராமங்களில் ஆங்காங்கு நட்டுவைத்து தங்களது நாகரீக ஆட்சியை பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி யாகச் செய்தனர்.[2]

ஏற்கெனவே கிளர்ச்சியின் ஈடுபாடு காரணமாக பலவித இழப்புகளுக்கு ஆளாகிய குடிமக்கள், இந்தக் கொடுர நடவடிக்கைகளினால் பெரும் பீதியடைந்தனர். இறந்தவர்களுக்கு மன முவந்து மிக்க மரியாதை செய்யும் இந்த புனித பூமியில், அவர்களது சடலங்களை இங்ங்னம் இழிவுபடுத்துவதை அவர்களால் எண்ணிப் பார்க்க முடியாததொன்றாக இருந்தது.

அப்பொழுது மறவர் சீமை எங்கும் இராமனாதபுரம் கலெக்டர் பகிரங்கப்படுத்திய பொது மன்னிப்பு விளம்பரத்தையும், வேண்டுகோளையும்[3] தொடர்ந்து குடிகள் வீடுகளுக்குத்


  1. Ibid., 29.5.1799, pp. 3246-48.
  2. Revenue Cousulations, Vol. 229, 29.5.1799, p. 4849.
  3. Proclamation dated 24-5-1799, and Madurai Collectorate Records, Vol. 1139, pp. 45-49.