பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 விந்தன் இலக்கியத் தடம் பழங்கால மேனாட்டவர்கள் அடிமைகளைச் சிங்கம் புலியோடு சண்டையிட வைத்து வேடிக்கை பார்ப்பார்கள். இங்கே? இந்தியன் சொல்கிறான் : 'இதே மாதிரி எங்களுடைய முதலாளிகளும் எங்களைச் சண்டையிட வைப்பதுண்டு. "மிருகங்களோடு அல்ல. மனிதர்களோடு. காரணம் பாழும் பசிதான் பசியா? அதைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லையே! என்கிறான் நீக்ரோ. அவர் பழைய அடிமை இந்தியன் கூறுவான் : "நான் புது அடிமை! ஏனெனில் உனக்கு இருந்த அந்தச் சோற்று நம்பிக்கைகூட எனக்கு இல்லையல்லவா? இந்தக் கதையின் எள்ளல் வீச்சில் மிகைப்படுத்தல் இல்லாமற் போகவில்லை. ஆனால் அடிமைத்தனம் இருவகைத்தது என்ற அடிப்படை உண்மை தெளிவாகப்படுகின்றது. கொத்தடிமை பற்றி இக்கதையில் பேசுகிறார் விந்தன். விந்தன் ஓயாமல் படித்துவரும் உலகம் என்னும் புத்தகம். நாள்தோறும் புதிய புதிய உண்மைகளை அவருக்கு உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும்! என்று விந்தன் வாழ்த்தி வரம் கொடுத்ததா டாக்டர் மு. வ, உலகம் என்னும் புத்தகத்தை நிலைபிறழாத ஒரே நோக்கோடு பயின்று வந்தவர் விந்தன், ஆகையால் அவருடைய தடப்பதிப்பு அழிக்கவும் பெயர்க்கவும் முடியாத வகையில் அமைந்துள்ளது. இந்தியர் என்ற பொதுச் சொல்லில் இந்திய அடிமை குறுக்கப்படுகிறார்கள். தலித்துக்கள் என் போர் பள்ளு, பறை, அருந்ததியர் என மூன்றடுக்கால் குறுக்கப்படுவோர் மட்டுமல்ல, அவர்களைப் போன்று அவர்களோடு சேர்த்தெண்ணப்படும் பலருமாவர் என்பது இக்கதையில் தெரிவிக்கப்படுகின்றது! இந்தச் சாபக்கேட்டுக்குக் காரணம் வருணாச்சிரமத்தர்மம் என்று விந்தன் எங்கும் கூறியதில்லை. மாறாக வர்க்க பேத அமைப்பையே அவர் சாடுகிறார். பணக்காரன், ஏழை மற்றும் ஹைசர்க்கிள், லோசர்க்கிள், சுரண்டுகிறவன் என்பதுதான் அவருடைய இருகூறுகளைக் கொண்ட சமுதாய வடிவம்.