பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 107 கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் திருவாங்கூரிலும் நாஞ்சில் பகுதியிலும் நிலமற்ற ஏழைக்கூலி மக்கள் சாம்பவர் என்றாலும் சாணார்கள் என்றாலும் ஒன்றாகவே கருதப்பட்டார்கள். அவர்களின் பெண்கள் மேலாடை அணியக் கூடாதிருந்தது. இந்தத் தலித்துக்கள் சார்பில் கிறிஸ்தவ மிஷனெரிகள் தலைமையில் upper cloth Movement நடைபெற்று வெற்றியைத் தேடித் தந்தது. விந்தன் கதை ஒட்டுமொத்தமாகப் புதிய இந்திய அடிமைத்தனத்தைக் குறிக்கிறது. கடைசி அடிமை விடுதலை பெறும்வரை அவர் இந்தியனை புதிய அடிமை என்று கூறுவதை நிறுத்தத் தயாராக இல்லை - பூவுலகிலும் சரி, வேறு உலகிலும் சரி - என்றே கூறத் தோன்றுகிறது. ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்களை மட்டுமல்லாமல், நோகடிக்கப்பட்ட, நொந்து போன மக்களைப் பற்றியும் எழுதியவர் விந்தன். உழைப்பவர்கள் நோகடிக்கப்பட்டு நொந்து போனபின் அவர்கள் நிலை என்ன என்பதைப் பல கதைகளில் எடுத்துச் சொல்கிறார். மனித யந்திரம் என்னும் கதையில் கைகால் இயங்க முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டு வேலையை இழக்கும் தொழிலாளியைப் பற்றிக் கூறும்பொழுது, கேவலம் ஒரு மெஷின் வேலை செய்வதற்கு லாயிக்கில்லாமற் போனால் அதைப் பழுது பார்க்க ரூபாய் ஆயிரம் வேண்டுமானாலும் எந்த முதலாளியும் செலவழிக்கத் தயாராயிருக்கிறான். ஆனால், வாழ்நாட்கள் முழுதும் தன்னிடம் நாயாயுழைத்த ஓர் ஏழைத் தொழிலாளி வேலை செய்வதற்கு லாயக்கில்லாமற் போனால், அவனுக்காக ஒரே ஒரு ரூபாய் செலவழிக்கக்கூட மனம் வருவதில்லை! மனிதன் என்ன, யந்திரத்தைவிட அவ்வளவு மட்டமானவனா? - இரும்பு யந்திரத்தை வேண்டுமானால் மனிதன் நினைத்தால் சிருஷ்டித்து விடலாம்; மனித யந்திரத்தை மனிதன் நினைத்தால் சிருஷ்டித்து விட முடியுமா? என்று எழுதுகிறார்.