பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 விந்தன் இலக்கியத் தடம் அல்லல்படுகிறவர்கள், நொந்துபோனவர்கள் வரிசையில் விந்தனுடைய பல கதைகளைச் சேர்த்து விடலாம். தேற்றுவார் யார், கருவேப்பிலைக்காரி, கவலையில்லை, பொன்னையா போன்ற கதைகள் இவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை இவை யாவுமே தலித் கதைகள் என்பதில் ஐயம் இருக்க முடியாது. நொந்து நொடிந்து போனவர்கள் வரிசையில் பெண்கள் இருப்பதை விந்தன் காணத் தவறவில்லை. அவருடைய மாட்டுத் தொழுவம் என்ற கதையே இதற்குச் சான்று. ஆயிரம் ஆயிரம் பெண்கள் சார்பில் ஒரு சகோதரியை விந்தன் இந்தக் கதையில் பேசவிடுகிறார். அவள் தம் வாழ்க்கை வரலாறு முழுவதையுமே சுருக்கித் தந்து விடுகிறாள். ஆடுமாடு வாங்கும் போது நடக்கும் பேரத்தைப் போன்ற கல்யான பேச்சைத் தொடர்ந்து திருமணம் நடைபெறுகிறது. அவளை மணந்து கொண்டவர் தனக்கு ஏதாவது காளியம் ஆக வேண்டியிருக்கும்போது அவளுடன் பேசுவார். அப்படிப் பேசும் போதும் அவருடைய பேச்சில் அன்பைக் கான முடியாது. அதிகாரத்தைத்தான் காண முடியும். இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாகிறாள் அவள். மாமியார் கொடுமை உட்படப் பல துன்பங்களைச் சகித்துக் கொள்கிறாள். எதற்காக? வயிற்றுச் சோற்றுக்காகவா? இல்லை. அதைப்பற்றி நாய்கூட கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பின் எதற்காக? பெண்ணாய்ப் பிறந்ததற்காக! அவர்கள் வீட்டுப் பசுமாட்டுக்கும் அவளுக்கும் ஓர் ஒப்புமை. பிரசவத்திற்குப் பிரசவம் - அந்தப் பசுமாட்டைக் கிராமத்திற்கு ஒட்டிவிடுவர்கள் பால் மரத்துப் போன அந்தப் பசுமாட்டுக்கு யாராவது தண்டத்தினி போட்டுக் கொண்டிருப்பார்களா? இவளுடைய மாமியாரும் பிரசவத்திற்குப் பிரசவம் - இவளைப் பிறந்தகத்திற்கு அனுப்பி வைப்பாள். இவள் கூறுவாள் : மாடு இப்போது சினையாகத்தான் இருக்கிறது. நாளை அதைக் கிராமத்துக்கு ஒட்டி வைக்கப் போகிறார்கள். பெற்றுப் பிழைத்தால் திரும்பி வரும். வந்தால் மீண்டும் பாலைக் கறந்து குடிப்பார்கள். வராமல் செத்தொழிந்தால் வேறு மாடு வாங்கிக் கொள்வார்கள். நானும் நாளைக்குப் போகிறேன். பெற்றுப் பிழைத்தால் திரும்பி வருகிறேன். வராமல் செத்தொழிந்தால் என்ன பிரமாதம்? அவர்