பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 விந்தன் இலக்கியத் தடம் ‘மாலை ஆறரை மணி ஆகிவிட்டால் அம்மாக்கண்ணு என்ற அந்தப் பெண் தெருக்குழாயில் குளிக்க வருவாள். அந்தக் குழாய்க்குப் பக்கத்திலுள்ள பாலத்துச் சுவரின் மேல் அப்புக்குட்டனும், ஆண்டியப்பனும் உட்கார்ந்துவிடுவார்கள். எதற்கு? கவர்ச்சியைக் காணத்தான் பக்கத்தில் யாரும் இல்லை என்று தெரிந்ததும் ரவிக்கையைக் கழற்றிக் கசக்கிக் காயப்போட்டுவிட்டு இடுப்பில் கட்டிக் கொண்டிருந்த புடவையைத் தளர்த்தி மார்பு வரை ஏற்றிக் குளித்தாள். குளித்தபின் அதன் ஒரு பகுதியை அவிழ்த்துத் துவைத்தாள். துவைத்த பகுதியின் ஒரு முனையை அருகில் இருந்த ஒரு மரத்தில் கட்டிச் சற்றுக் காற்றாடவிட்டு விட்டுத் துவைக்காத பகுதியுடன் அவளே இன்னெரு மரமாக நின்றாள். இந்தக் கவர்ச்சிக் கட்டத்திற்காகக் காத்திருந்த இரண்டு போக்கிரிகளும் விசிலடித்துக் கொண்டே பாலத்தைவிட்டுக் கீழே குதித்தார்கள். அப்போது அவள் நினைப்பாள். இன்னொரு புடவை இருந்தால் இந்தப் பாவிகளின் கண்களுக்கு இப்படி விருந்தாக வேண்டாம். எங்கே வாங்க முடிகிறது? வாங்கினால்தான் அவர் விட்டு வைபபாரோ? உடனே எடுத்துக் கொண்டு போய் விற்று குடித்துத் தீர்த்து விடுகிறார். நாளொன்றுக்கு பத்துப் பைசா வீதம் சேர்த்தான் விளைவாக ஏழுமாதம் கழித்து அவளால் ஒரு புதுப்புடவை வாங்க முடிகிறது. அவளுடைய நான்கு குழந்தைகள் பழைய புடவையைத தலைக்கு ஒரு துண்டாகக் கிழித்து கட்டிக் கொண்டு குதிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனந்தக் கண்ணிர் வடித்தவளாக அவள் பிறந்த மேனியாய புதுப்புடவையை எடுக்கப் போனபோது வைத்த இடத்தில் அதைக் காணவில்லை. ஆம், ஜெயிலிலிருந்து திரும்பிய அவள் கணவன்தான் அதை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான். அந்த வழியே வந்த அப்புக் குட்டனும் ஆண்டியப்பனும் குடிசைக்குள் எட்டிப் பார்க்கிறார்கள். விந்தன் எழுதுகிறார். எந்த அறைகுறைக் காட்சிக்காக இத்தனை நாளும் அவர்கள் அந்தப் பாலத்துச் சுவரின் மேல் உட்கார்ந்து தவமிருந்தார்களோ...