பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 விந்தன் இலக்கியத் தடம் நியாயம் இருந்திருக்கும்! அன்புப் புரட்சியின் உண்மைக் குரலையும், வீரம் செறிந்த காதல் தத்துவத்தின் மனக்கனவையும் நான் உய்த்துணர்ந்து அனுபவிக்கவும் முடிந்திருக்கும்! சமுதாய நீதியையும், (Social Justice), &&pgmu fiftlab.333 stoguylä (Social Reform), படிப்பினைத் தீர்ப்பையும் (Moral Judgement) வழங்கிய பெருமை உங்களை வந்தணைந்திருக்கும்! வாழ்க்கைக்கு உரித்தான பொருளுக்கு ஓர் உரைகல்லாக அகல்யாவும் கனகலிங்கமும் அமைந்திருப்பதாக நீங்கள் திருப்திப்படுவீர்களானால், அகல்யா- கனகலிங்கத்தின் கதை அரைகுறைக் கதைதான்! ஆமாம், அரைகுறைக் கதையேதான்! காரணம் இதுதான் : அவர்களின் கனவு நிறைவு பெறாமல் நிற்பதைப் போலவே, உங்களுடைய அருமையான கதையும் நிறைவு பெறாமல் நிற்கிறது! அகல்யாவும் கனகலிங்கமும் பாத்திர அமைப்பின் பண்பிழந்த Lumëélgrález 6mmes Geu (Characterless Characters) egy svog G supp ú பிண்டங்களாகவே தரிசனம் தருகிறார்கள்! பாலும் பாவையும் கதையில் உங்களுடைய கிண்டல் பாவமும், நம்பிக்கை வறட்சியும் தோய்ந்த எழுத்து நடையை நான் மனம் பிணைத்து அனுபவித்தேன். சமுதாயத்தின், யார்த்தமான சித்திரம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், கடவுளின் பெயரால் செய்யப்பெறும் மோசடிகள், இலக்கியக் கலையுலகின் நடைமுறைப் போக்கு இப்படிப்பட்ட குழல்களிலே உங்கள் பேனா சுழலும்போது உங்கள் தனித்தன்மையைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் உங்களுக்கே உரித்தான குறிக்கோள் தன்மையை (ideal Self) இந்த நெடுங்கதையில் இனம் காண இயலாமற் போய்விட்டது! இன்னும் ஒரு பிழை : அகல்யாவிலிருந்து சமையற்காரன்வரை எல்லோருக்குமே நீங்கள் இரவல் குரல் கொடுத்திருக்கிறீர்களே, ஏன்?