பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 147 எங்களுடைய கண்ணிராவது நனைக்கவில்லையா? - சீர்திருத்தம், சீர்திருத்தம் என்று வாய் ஓயாமல் அடித்துக் கொள்ளும் இளைஞர் உலகம் இந்தக் கொடுமையை இன்னும் எத்தனை நாட்களுக்குச் சகித்துக் கொண்டிருக்கப் போகிறது? உச்சக் கட்டத்தில், பகுத்தறிவுப் பாணியில் அவள் பேசும் செயற்கைத் தன்மையுடைய இந்த வசனம், அவள் நெஞ்சறிந்து ஏற்றுக் கொண்ட பழியைத் துடைக்கவல்லதா? ஊஹாம்! கெட்டவளுக்கு அடைக்கலம் கொடுப்பதன் மூலமே ஒருவன் நல்லவன் ஆகிறான்! இது அண்ணலின் கருத்து. இந்நிலையிலே, கனகலிங்கத்தை நீங்கள் ஏன் அதற்குள் சாகடித்தீர்கள்? நுண்ணிய கட்புலம் அமைத்து எண்ணிப் பார்க்குங்கால், கனகலிங்கம் ஒரு மின்னலெனவே தோன்றி மறைகிறான். இறந்தும் உயிர்வாழும் பாத்திரப் படைப்பாக ஆக்கவா கனகலிங்கத்தை நீங்கள் இவ்வாறு ஆக்கியிருக்கிறீர்கள்? நல்லவர்கள் வாழ்வதில்லை - நானிலத்தின் தீர்ப்பு! என்ற வாசகத்தை மெய்யாக்க வேண்டிய நீங்கள் இவ்விரு வருக்கும் விண்ணுலக யாத்திரைக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும்! அதனால்தான், முடிவுகூட முன்னைய இலக்கிய மரபை ஒட்டிப் பழைமைப் பாணியிலேயே அமைந்து சப்பென்று போய்விட்டது! உங்கள் கொள்கைகளுக்கு உகந்த ரீதியில் பாத்திரங்களை உருவாக்கி, அவர்கள் வாய்வழியே சமுதாயச் சிக்கல்களை அலசிப்பார்க்க முயன்ற நீங்கள், முடிவில் அகல்யாவின் இறந்த காலத்துக்கும் எதிர் காலத்துக்கும் ஊடாக சிக்கலைத் தீர்த்து வைக்கும் வகையில் உங்கள் பணியை ஏற்று, அகல்யாவின் எஞ்சிய வழ்வைக் கனலிங்கத்தின் அன்புக்கரங்களில் ஒப்படைத்திருக்கும் பட்சத்தில், இவ்விரு வரது குணச்சித்திர அமைப்புகளும் முழுமையடைந்திருக்கக்கூடும்! நீதி தேவனின் மயக்கம் தெளிந்து, நீதியுள்ள சமுதாயச் சித்திரம் உருவாகியிருக்கும்! பெண் குலத்தைத் தூய்மைப்படுத்துவதற்காகவே நீங்கள் இதை எழுதியதாக வாதம்புரியும் உங்கள் பேச்சிலும் தர்க்க ரீதியான