பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 149 உங்கள் நோக்கு புதிது; போக்கு, பழசு! உங்கள் கரு அற்புதம், உரு குறைப்பிரசவம்! ஆத்ம விசாரம் இருக்கும் அளவுக்கு ஆத்ம விசாரணை இல்லையே...? கதையிலே பிரச்னை - சமுதாயப் பிரச்னை இருக்கிறது; அப்பிரச்சினைக்கு உரிய தீர்வு சமுதாயரீதியாக அமையவில்லையே? இன்னொன்றையும் நான் சுட்டிச் சொல்லத்தான் வேண்டும்! - உங்கள் கதையில் இடம்பெறும் அந்தப் பிரச்னை கூட, ரொம்பவும் புதியதென்றும் என்னால் அங்கீகரிக்கவோ, பிரகடனப்படுத்தவோ இயலவில்லைதான்! வையம் பேதைமையற்றுத் திகழ வேண்டுமென்று எதிர்பார்த்து பெண்களின் அறிவை வளர்க்க இக்கதையை ஒரு கருவியகப் பயன்படுத்த நினைத்து நீங்கள் இவ்வளவு பக்கங்களை எழுதியிருக்கிறீர்களென்றே வைத்துக் கொள்வோம்! நம் தமிழ்ச் சமுதாயம் இப்படித்தான் அமைந்து இருக்கிறதென்பதை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், நம் சமூகம் இப்படி இப்படி அமைந்தால்தான், இத்தகைய தவறுகளிலிருந்து அகல்யாவைப் போன்ற அபலைகள், தமிழ் அபலைகள் நல்ல விடிவு கண்டு வாழ வழி பெறுவார்கள் என்ற ஓர் ஊகத்துக்குரிய தார்மீக அடிப்படையையாவது நீங்கள் கோடி காட்டியிருக்க வேண்டாமா? நீங்கள் சமுதாயத்திற்கு - நம் அருமைத் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும் ஆகியிருக்க வேண்டும் அல்லவா? விந்தன் என்ற பெயரைக் குறிப்பிடும்போது, ஓ! பாலும் பாவையும் விந்தனா? என்று இன்றும் நண்பர்கள் பலர் கேட்பதை நான் கேட்டிருக்கிறேன். அதனால்தான். நான் காணும் பாலும் பாவையும் விந்தன் அவர்களை அந்த நண்பர்களுக்கு இக்கடிதத்தின் வழியே அறிமுகம் செய்ய வேண்டியவன் ஆனேன்! go Lors — 1957 o