பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(20) எனக்குப் பிடித்த புத்தகம் பாலும் பாவையும் - கலைப்பித்தன் சுவையான புத்தகம் எப்படி இருக்க வேண்டும்? எழுதுகோல் கண்ணிர் வடிக்கும்போது புத்தகம் சிரிக்கிறது என்றர் அத்தார் என்பவர். எந்தப் புத்தகம் ஆக்கியோரின் இரத்தத்தால் ஆக்கப்பட்டிருக்கிறதோ அந்தப் புத்தகமே எனக்கு விருப்பம் என்றார் ஜெர்மன் தத்துவ ஞானி நீட்சே சிந்தனையைக் கிளறும் சிறப்பு மிகும் கருத்துக்களை விந்தை மனிதர் விந்தன் அவர்கள் எழுதிய பாலும் பாவையில் பார்க்கிறோம். நவீனத்தின் கரு இதோ. கனகலிங்கம் என்ற இளைஞன் சென்னையில் ஒரு புத்தகக் கடையில் பரமசிவம் என்பவரிடம் முப்பது ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கிறான். கலைஞான புரத்தில் நடக்கும் அகஸ்தியர் விழாவிற்குப் புத்தகங்களை விற்று வருமாறு கனகலிங்கத்தை அனுப்புகிறார் பரமசிவம். அங்கு அவன் நள விலாஸ் என்ற உணவு விடுதியில் தங்கியிருக்கிறான். அப்போது அதே நளவிலாஸில் தங்கியுள்ள அகல்யா என்ற கல்லூரி மாணவியைச் சந்திக்கிறான். அவளோ இந்திரன் என்பவனை நம்பி ஓடி வந்து அவனால் கைவிடப்பட்டவள் என்பதை அறிகிறான். விழா முடிந்து கனகலிங்கம் அகல்யாவோடு சென்னைக்குத் திரும்புகிறான். கனகலிங்கம் அகல்யாவுடன் வந்ததைப் பரமசிவமும் பார்த்துவிடுகிறார். கனகலிங்கத்தை வேலையிலிருந்து நீக்கிவிடுகிறார். ஏன்? அகல்யாவின் சித்தப்பா தான் பரமசிவம்.