பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 151 கனகலிங்கம் கார் விபத்தில் இறந்துவிடுகிறான்; அகல்யா தன் பெற்றோர் தங்கியிருக்கும் இடத்தைத் தன் சினேகிதி வாயிலாக அறிந்து அவர்களைப் பார்க்கச் செல்கிறாள். அங்கு அவள் சித்தப்பா பரமசிவம் ஒரு காரோட்டிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து கனகலிங்கத்தைச் கொல்லச் சொன்னதாக அவளது அப்பாவிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுவிடுகிறாள். வழியில் அவளுக்குத் தெரிந்த தசரத குமாரன் அவளுக்கு வாழ்வளிப்பதாக அழைத்துச் சென்று அவளை விரட்டிவிடுகிறான். அகல்யா கடலோடு சங்கமமாகி விடுகிறாள். விந்தனது எழுத்துக்கள் சிந்தனை ஊசிகளாக மாறி கருத்தை ஆழமாகத் தைக்கின்றன. புத்தகக் கடையில் இருக்கும் கனகலிங்கத்திடம் அதோ ஓர் எழுத்தளர் வருகிறார். அவர்கள் உரையாடலைக் கேட்போம் : ', ...உங்களுக்கு என்ன வேண்டும்! என்று விசாரித்தான் கனகலிங்கம். ‘ என்றும் சாகாத நூல் ஒன்று, இயற்றியிருக்கிறேன்; அதைப் புத்தகமாக வெளியிட வேண்டும்.' வந்தவர் தாம் சொல்ல வந்த தை முடிக்கு முன்பே, 'அதிருக்கட்டும், ஆசிரியர் செத்து விட்டாரா? இல்லையா? என்று கேட்டான் கனகலிங்கம். வந்தவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஏன்? என்று நாக்குழறக் கேட்டார். "இங்கே செத்துப் போன நூலாசிரியர்களின் நூல்களைத்தான் வெளியிடுவது வழக்கம்.” 'அப்பொழுதுதான் அந்த நூலுக்கு ஒரு தனி மகத்துவம் இருக்குமென்றா? அதெல்லாம் ஒன்றுமில்லை; எங்களுக்கு வேண்டியது எங்களிடம் இல்லாத மூளை! அதைத் தவிர வேறொன்றும் செலவழிக்காத ஆசிரியருக்கு நாங்கள் அனாவசியமாகப் பணம் கொடுக்க விரும்புவதில்லை .