பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* ss விந்தன் இலக்கியத் தடம் வைக்கப்படுகிறது. இங்கு முக்கிய மல்ல; பேச்சும் நடை முறையு. முக்கியமல்ல. அவன் உணர்வதும், உணர்ந்து அதை வெளிக்காட்டித் கொள்ளும் விதமும் முக்கியமல்ல, ஐடியா தான் முக்கியம். அதை ஊதிப் பெருக்க வைப்பதுதான் முக்கியம். இப்படி ஊதி ஊதிப் பெருக்க வைக்கையில் கதை என்பதும் நழுவ, ஐடியாவே மிஞ்சுகிறது. இன்று பிரதான பிரச்சினையாக இருக்கும் கருத்து நாளை தன் பிரதானத்தை இழக்கையில், எல்லாம் பின்னுக்குப் போய் விடுகிறது. சரித்திரம் ஒவ்வொரு கணமும் சொல்லித் தரும் பாடம் இது. ஆனாலும், ஒவ்வொரு தலைமுறையிலும் - ஒவ்வொரு மொழியிலும் ஐடியா எழுத்தாளர்கள் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்; இவர்கள் எழுத்துக்கு வரவேற்பும் பாராட்டும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ராஜாஜி - பழமையைப் போற்றி நீதியை உணர்த்தும் ஐடியா எழுத்தாளர் நல்லது சோதனைக்கு உள்ளாகும், கடைசியிலே வெல்லும் என்னும் இலட்சிய வாதத்தில் நம்பிக்கை உள்ளவர். இந்த இலட்சியத்தை நிலை நாட்டக் கஷ்டப்பட்டுக் கதைகள் எழுதிக் கொண்டு இருந்தவர். இவர் தான் அகாடமிகளால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் எழுத்தாளர். - ராஜாஜி போன்றவர்களின் ஐடியாவுக்கு முற்றிலும் மாறாக எழுதும் விந்தன் போன்றவர்களுக்கு அங்கீகாரம் ஏதும் இல்லை. ஆனாலும் - இவர்கள் மக்களின் நம்பிக்கைக்கு உகந்தவர்களாக இருந்து வருகிறார்கள். ஒரு கதை, வசதியும் வசதியின்மையும் நிறைந்த ஒரு குடும்பத்துச் சிறுவர்களின் மூலந் தொடங்கி - சோகத்திலும் ஆசாபங்கத்திலும் எரிச்சலிலும் முடியும் கதை. குழந்தைகளின் குதுகலம். வாழ்வின் அதல பாதாளத்திற்குத் தகப்பன் செல்லுகையில், தன்னுடைய வேட்கை நிறைவேறி விடும் என்ற கற்பனையில் அமிழ்ந்து போகும் சிறுவனின் நோக்கில் சொல்லப்படும் கதை. ஆனால் கதை, போகப் போக சிறுவன் நோக்கில் அகன்று முதலாளி என்னும் அம்சம் கதையைப் பிடித்துக் கொள்கிறது. முதல்