பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் #57 இழை அறுந்து போக தத்துவச் சரட்டில் வழக்கமான கதையாகக் கதை தொடங்குகிறது. சமூக விமர்சனமாக முடிவடைகிறது. மணி சினிமா, பீச் ஹோட்டல் - ஒன்றையும் காணாதவன். ஆனால் அவன் நண்பன் தகப்பனாரோடு ஒரே நாளில் வரிசையாக சினிமா பார்த்துவிட்டு, பீச்சுக்குப் போய் காற்று வாங்கி விட்டு, ஆடும் குதிரையோடு வந்து பெருமை அடித்துக் கொள்கிறான். மணிக்கு இவற்றையெல்லாம் காண வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆனால் இவனோ தகப்பனையே காணாதவன். அம்மாவை அப்பா எங்கே என்று கேட்டால், வேலைக்குப் போயிருக்கிறார் என்பாள் ஒரு சமயம், ஊருக்குப் போய் இருக்கிறார் என்பார் இன்னொரு சமயம். அப்பா இறந்து போயிட்டார் என்று இவன் தொந்தரவு தாங்காமல் சில சமயம் சொல்லுவாள். மணி அம்மாவை பீச்சுக்குக் கூட்டிக் கொண்டு போகச் சொன்னான். அவளோ பீச்சு இருக்கும் பக்கம்கூடத் தெரியாது என்று அழுதாள். இரவில் கணவனிடம் பிள்ளையின் கோரிக்கையைச் சொன்னாள். எனக்கு எங்க நேரம், காசு கிடைக்கிறது; இருக்கட்டும் என்றான். விடியற்காலையில் அவர் வேலைக்குப் போய்விட்டார் மணி விளையாடிக் கொண்டிருந்தான். அம்மா! பூச்சாண்டி வந்து என்னைப் பிடிச்சுக்கிட்டானே! என்று திடீரென்று கத்தினான். ஐயோ. என்னடா, கண்ணு' என்று கதறிக் கொண்டே தாயார் வாசலுக்கு வந்தாள். முகத்தில் தாடியும் மீசையும் வளர்ந்து பார்ப்பதற்கு விகாரமாயிருந்த ஒரு தரித்திர உருவம் மணியை ஆசையுடன் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தது. மணியைப் போல் அவன் தாயாரும் அந்த உருவத்தைக் கண்டு பயந்துவிடவில்லை; முக மலர்ச்சியுடன், 'இதுதாண்டா. உன் அப்பா என்றாள். "நிஜமாகவா, அம்மா என் அப்பாவா, அம்மா' என்றான் குழந்தை ஆச்சரியத்துடன்.