பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 விந்தன் இலக்கியத் தடம் ஆமாண்டா: ஆமாம்! என்றாள் அவள் 'அப்படீன்னா. இனிமே நான் அப்பாவோட சினிமாவுக்குப் போவேன். ஹோட்டலுக்குப் போவேன், பீச்சுக்குப் கூடப் போவேன் என்று பொங்கி வந்த சந்தோஷத்தில் அடுக்கிக் கொண்டே போனான். மாணிக்கம் பிள்ளை அவனுடைய சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. அந்தப் பாவிதான் எனக்கு வயசாயிடுச்சுன்னு என்னை வேலையிலிருந்து தள்ளிட்டானே? என்றார். இரண்டு சொட்டுக் கண்ணிரை உதிர்த்துக்கொண்டே ‘என்ன? என்று திடுக்கிட்டுக் கேட்டாள் அவருடைய மனைவி. ஆமாண்டி, ஆமாம்! என்றார் அவர் அலுப்புடன். “தயா விசயமா கொஞ்சம் நஞ்சம் பணம் கூடக் கொடுக்கலையா என்று கேட்டாள். அது கூடக் கேட்டுப் பார்த்தேனே! இத்தனை வருசமா உனக்கு நான் வேலை கொடுத்து ஆதரிச்சதற்கு நீ தாண்டா எனக்கு ஏதாச்சும் கொடுத்துட்டுப் போகணும் என்கிறானே! என்கிறார். குழந்தைகளின் ஆசா பாசத்தோடு தொடங்கி, முதலாளி தொழிலாளியின் இளமையை மட்டும் சுரண்டவில்லை, அவனுடைய மகிழ்ச்சி - பிள்ளையின் குதுரகலம் எல்லாவற்றையும் சுரண்டிக் கொண்டு சக்கையாகியதும் வீசியெறிகிறான் என்பதை அப்பாவித் தனத்தின் மீது ஏற்றி வைத்து, கதையாக்கி இருக்கிறார் விந்தன். இது விந்த னின் புத்திசாலிதனமான கதை. இந்தப் புத்திசாலித்தனத்தைத் தாங்க வலுவின்றி, கதை தொய்ந்துவிடுகிறது. துயரத்தில் அமிழ்ந்துவிடாமல் வாழ்க்கையைக் கிண்டல் பண்ணுவது - எள்ளி நகையாடுவது விந்தன் கதைகளில் ஓர் முக்கிய அம்சம். இந்த அம்சம் பல கதைகளுக்குப் பலத்தைத் தருகிறது. அழகைத் தருகிறது. பிரச்சாரத் தன்மையைக் கொஞ்சம் குறைத்துக் காட்டுகிறது. இம்மாதிரியான கதைகளுக்கு ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் இடம் கிடைப்பது அரிதுதான். ஆனால் விந்தன்