பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 159 கதைகள் பலவும் கல்கி பத்திரிகையில் வெளியாகி ஏராளமானவாகளின் மன அமைதியைக் குலைத்தது. நல்லது மட்டுமே வெல்லும எனபதல்ல - கெட்டதும் வெல்லும் - கடைசியில் நல்லவனும் துன்பததில் அமிழ்ந்து போக முடியும் என்ற தத்துவத்தைச் சொலலி வாசகர்களை எச்சரிததது சரித்திர பூர்வமாகப் பார்க்கையில் விந்தன், தன் காலத்து எழுத்தாளர்கள் பலரின் தததுவச் சரட்டிலிருநது மாறுபட்டுக் காட்சி தரவே செய்கிறார். நான்கு பெண்களைப் பெற்ற ஒரு தகப்பனின் கதை. முதல் பெண்ணை மூன்றாநதாரமாக ஒரு முதியவனுக்குக் கொடுத்து அவள் அமங்கலியாக வந்துவிட்ட பின் - இரண்டாவது மகளை இரண்டாந்தாரமா ஒரு இருமல் வியாதிக் காரனுக்குக் கொடுத்த பின்னால் - மூன்றாவது பெண்ணையாவது வரதட்சனை இல்லாமல் நல்ல இடம் கிடைக்காதா என்று தவித்துக் கொண்டு இருக்கும்போது வழிப்போக்கனாக ஒரு தேசபக்தன் வருகிறான் சிறையிலிருந்து திரும்பி ஓர் இரவு தங்கிச் செல்லும் அவன் பின்னால் தேச பக்தி விலை போகாததும் விமானப் பணியில் சேர்நது விடுகிறான். ஜேம்ஸ் தாம்ஸ் என் இந்தக் குடும பத் தோடு நட் போடு இருக்கிறான் ரங்கா என்ற இவரது மூன்றாவது பெண் மேரி ரோஎபீயாகி - கிறிஸ் முறைப்படி விவாகம் நடக்கிறது. இந்த வைபவத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட எங்கள் உறவினர் யாவரும் என் மீது வசை மாறிப் பொலிந்து கொண்டே, நான் இறந்து விட்டதாகப் பலித்துப் புண்ணிய ஸ்நானம் செய்துவிட்டார்கள். ரொம்ப சரி; செத்தால் தலை முழுகத்தானே அவர்கள் இருக்கிறார்கள்? பின், உறவினர் எதற்கு? பொருளாதார ஏற்றத் தாழ்வு சமூக உறவுகளை எவ்வளவு தூரம் பாதிக்கிறது - என்பதுதான் கதை. இதனை விந்தன் அப்பாவித்தனமான தந்தையின் நோக்கில் புத்திசாலித்தனமாகச சொல்லியிருக்கிறார். விந்தன் கதைகள் சந்தோஷத்தில் முடிந்தாலுஞ் சரி, துக்கத்தில் முடிந்தாலும் சரி - வாசகர்களை மன உளைச்சலும் அதிருப்தியும் அடையச் செய்யும் கதைகள்.