பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தன் இலக்கியத் தடம் 43 8 தமிழுக்காக உழைத்துத் தலை நரைத்துப் போன பூர் வ.ரா. அவர்கள், விந்தனைப் பற்றி ஒரு சமயம் கூறிய சில வார்த்தைகளை இங்கே குறிப்பிட விரும்புகிறோம். கல்கி பத்திரிகையில் விந்தன் என்ற பெயரில் ஒருவர் கதை எழுதுகிறார். அந்தக் கதைகள் பெரு வாரியாகப் பாட்டாளிகளின் இருதய வேதனையையும் சுக துக்கங்களையும், சமூக முன்னேற்றத்திற்கு வேண்டிய மறு மலர்ச்சிக் கொள்கையையும் உடையவை. படிக்கும்போது என் உள்ளம் உருகுகிறது என்று கூறினார். விந்தன் அவர்கள் சமூக முன்னேற்றத்தையும் பாஷையின் அழகையும் மனதில் வைத்துக் கையண்டிருக்கும் நடை இனிமையாகவும், எளிமையாகவுமிருக்கிறது. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்னும் கொள்கையை முழுமையும் கடைப்பிடித்திருக்கிறார். மனித சமுதாயத்திற்கு வேண்டிய பல உயர்ந்த நோக்கங்களையும் சிந்திக்கத் தக்க கருத்துக்களையும் பூரீ விந்தன் தமது கதைகளில் அடக்கியிருக்கின்றார். 'மனித யந்திரம் என்ற கதையில் வரும் சில அருமையான வரிகளைப் படித்துப் பாருங்கள். கேவலம் ஒரு மெஷின் வேலை செய்வதற்கு லாயக்கில்லாமற் போனால் அதைப் பழுது பார்க்க ரூபாய் ஆயிரம் வேண்டுமானாலும் எந்த முதலாளியும் செலவழிக்கத் தயாராக இருக்கிறான். ஆனால், வாழ்நாள் முழுமையும் தன்னிடம் நாயாக உழைத்த ஒரு ஏழைத் தொழிலாளி வேலை செய்வதற்கு லாக்கியக்கில்லாமற் போனால் அவனுக்காக ஒரே ஒரு ரூபாய் செலவழிக்கக் கூட மனம் வருவதில்லை. மனிதன் என்ன யந்திரத்தை விட அவ்வளவு மட்டமானவனா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இருநூறு பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் மேன்மையை விளக்க மேற்கண்ட பத்து வரிகளே போதுமானது. வெள்ளிமணி - 1947 &