பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 171 ஒன்றை நடத்தலானார். மனிதனை மனிதனாக வாழ வைக்க முனைந்த மனிதன் ஏட்டை, மனித உருவிலிருந்தோரின் கண்கள் கான அஞ்சின. எழுத்தாளனே, நீ ஏதேனும் சில்லரை சேர்ந்திருந்தால், அதைப் போக்கிவிடும் நினைப்புனக்கு உண்டானால், நல்ல கருத்துக்களைக் கொண்ட ஏடு ஒன்றைத் துவக்கு என்பது அனுபவம் உடைய யாரோ கூறிய அறிவுரையாகும். இந்த அறிவுரையை மீறி, கருத்துப் பேழையாக மனிதன் ஏட்டை விந்தன் துவக்கினார்! ஆம், துவக்கினார், துவண்டார், மெலிந்தார், வாடினார்; முடிவில் நோய்க்காளானார். நல்ல மக்களையும் மனைவியையும் கொண்ட அவரை அவர்தம் நல்ல எழுத்துக்களே உண்டுவிட்டன. அவருக்கென அக்காலத்தே நிறைய வாசகர் உண்டு, அவருடைய எழுத்தை விரும்பும் எண்ணற்ற வாசர்களில் எத்தனை பேர் இன்று வரை நினைவில் கொண்டுள்ளனர் என்பது தெரியாது. எழுத்தாளனின் உடலை மட்டுமின்றி, உயிரையும் உண்ணத் துடிப்பவர்தாமே 62/ ፬ ረ፰ & வட்டத்தினர் 67 or நினைக்குமளவிற்கு,விநதனை மறந்துவிட்ட வாசகர்களிடையே ஒரு பரமசிவம் என்பாரைக் காண முடிகின்றது. இந்தப் பரமசிவம், மக்கள் மறந்துவிட்ட விந்தனை நினைவுக்குக் கொண்டு வருகின்ற நல்ல பணியை மேற்கொண்டுள்ளார். ஆம், அழியா நினைவாக விந்தன் பற்றி நூல் ஒன்றை வெளியிட உள்ளார் என்பதை நினைக்கும்போது, மன மகிழ்வு தோன்றுகிறது விந்தன் எழுதுகோலை ஆயுதமாக - அதுவும் நற்காரியங்கட்குப் பயன்படுத்துகின்ற நல்லாயதமாகவே ஏந்தி வாழ்ந்தவர். அவர்தம் நினைவை புதுப்பித்தளிக்கின்ற திரு.மு. பரமசிவம் அவர்களை மனிதத் தன்மையுடைய மாண்புடையார் என்பேன். எழுத்தாளனே! இதயம் பெறுவாயாக! 1982 {