பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 விந்தன் இலக்கியத் தடம காசுக்கு ஆசைப்பட்டு எழுத வரும் எழுத்தாளர்கள் போன்றவர்கள் காலமாக இருக்கிறது. இது. இவர்கள் தான் இன்றையச் சமுதாயத்தை ஆட்டிப் படைக்கிறார்கள். ஆனால் விந்தன் பணத்துக்கும் பதவிக்கும் பின்னால் ஓடாத, சென்றுவிட்ட தலைமுறையச் சேர்ந்தவர்; அந்தப் பரம்பரையின் பொறுப்பையும் பெருமையையும் அறிந்துணர்ந்த படைப்பாளி சிறுமைகளைக் கண்டால் சீறி விழுகிற வர்க்கத்தைச் சேர்ந்த சிற்பி. நீதியும் நேர்மையும் கொண்ட சமுதாயத்தைப் பற்றிக் கனவு காணும் கலைஞர்களிலே அவர் ஒருவர். அவர் ஏழையாகவே பிறந்து, வளர்ந்து மறைந்துவிட்டவர் என்றாலும் எண்ணத்திலே உயர்ந்து நின்ற சிந்தனையாளர் அவருடைய ஆகிருதி வானளாவி உயர்ந்து தோன்றாமல், இருக்கலாம். ஆனால் ரோஜாவாகவே எல்லாப் பூக்களும் இருந்துவிட்டால் என்ன மகத்துவம் இருக்கிறது? அவர் மகிழம்பூ வாக இருந்துவிட்டுப் போகட்டுமே. மகிழம்பூவுக்கும் பல சிறப்புக்கள் உண்டு. அளவில் சிறியது; வாட வாட மணம் பெருக்கி மனப்பது. ஆக - மணத்திலும் குணத்திலும் மகிழ்ச்சி தருகிற மலர் அவர் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. விந்தனுக்கு நீதியற்ற சமுதாயத்தின் மீது ஒரு கோபம். அந்தக் கோபத்தில் சில உண்மைகள் அவர் கண்ணில்படாமல் தப்பிவிகிற நிலைகளும் உண்டு. பனம் படைத்தவர்களிலே மனிதப் பண்பு மிக்க சிலரும் உண்டு. ஏழை மனிதரிடையே கொடிய நெஞ்சம் படைத்த நன்றியற்றவர்களும் உண்டு. ஒட்டு மொத்தமாக அவர்களை அடியோடு நல்லவர்களாகவோ, கெட்டவ்களாகவோ கருதிவிட முடியாது. விந்தன் கதைகளில் அத்தகைய விதி விலக்குகளைக் காண (էքեԳ աո5/. அவருடைய திருஷ்டியில் பனம் படைத்தவன் பொல்லாதவன் தான்; ஏழை யோக்கியமானவன்தான். மறந்து கூட அவர் பார்வையில் இதற்கு மாறுபாடாக எதுவும் பட்டதில்லை. அவருடைய கோபம் அவர் பார்வையைச் சில சமயங்களில் மறைத்தாலும் கலை வடிவத்துக்குச் சில அதிசயோக்திகள் அதாவது