பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 விந்தன் இலக்கியத் தடம் தீண்டாமையை முன்வைத்துப பேசப்படும் இக்கதையில், சுற்றிச் சூழ்ந்துள்ள மூடபபழக்க வழக்கங்களையும் ஒவ்வொரு நிகழ வுகளிலும் வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். சான்றுக்கு ச சிலவற்றைக் காணலாம் : ஒருவன் நண்பன் வீட்டில் விருநது சாப்பிட்டு முடிந்த கையோடு எச்சில் இலையை எடுத்தபோது நண்பனின் மனைவி என்ன காரியம் செய்துவிட்டீர்கள்? என்று வருந்துகிறாள். ஏன்? "அன்னதானம் செய்வதிலுள்ள புனணியமனைத்தும் எச்சில் இலையை எடுத்துப் போடுவதில்தான் அடங்கியிருக்கிறது என்பது அந்த அம்மாளின் நம்பிக்கை. என்னுடைய செய்கையால் அந்த மகத்தான புண்ணியம் தனககுக் கிடைக்காமல் போய்விட்டதே என்பதில்தான் அந்த அம்மாளுக்கு எவவளவு வருத்தம்! 'உண்டுண் டுறங்குவதே யல்லாது வேறொன்றும் கண்டிலாத அடியார்கள், தங்களுக்கு இயற்கையாகவுள்ள சோம்பேறித்தனத்தால் புண்ணியத்தைச் சாக்காக வைததுக் கொண்டு, எச்சில் இலையை எடுத்துப் போகும் வேலையைக்கூட அன்னதானம் செய்பவர்கள் தலையிலேயே கட்டிவிட்ட தந்திரத்தை அந்த அம்மாள் இநத அணுகுண்டு சகாப்தத்தில் கூட அறியாமலிருந்தது எனக்கு ஆச்சரியமாய்த் தானிருந்தது ஒரு பிடி சோற்றுக்கு வழியினறிச சோர்ந்து போய்ச் சுருண்டு கிடக்கும் சோலையப்பன்கள் வாழும் கிராமத்தில், வசதி படைத்தவர்கள் வருந்தி வருந்தி விருநது படைக்கும் மனிதர்களின் மனோபாவத்தையும் ஆசிரியர் எடுத்துச் சொல்ல மறக்கவில்லை அரிஜனங்களுக்கு ஆலயத்தைத் திறந்துவிடறாங்கன்னு தர்மகர்த்தா சொன்ன போது, ஆாவத் தோடு சோலையப்பன் ஆலயத்துக்குப் போகவில்லை. காலங்காலமாகக் கடவுளைக் கண் குளிரக் காண்பதற்குத் தடையாக இருந்து வந்த கதவுகள் திறந்துவிட்டதே என்கிற மகிழ்ச்சியும் அவனுக்கு ஏற்படவில்லை, வாழ்க்கையில் ஒரு முறையாவது ஆண்டவனைச் சந்தித்து தனது குறைகளைச் சொல்லுவதற்கு வாய்ப்பு கிடைத்ததே என்கிற எண்னமும அவன் மனத்தில் எழ விலலை; மாறாக அவன உளளத்தின் உணர்ச்சிகள் இப்படிததான் வெளிப்பட்டன :