பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 185 'தர்மகர்த்தா ஐயா வந்து என்னைக் கூப்பிட்டாரு எப்பவோ ஒரு நாளைக்கு அபூர்வமாகக் கெடச்ச வேலையை விட்டுட்டு நான் எங்கே கோயிலுக்குப் போறது, சாமி? அந்த வேலையை எனக்கு அப்போ ‘சாமி மாதிரி இருந்தது; தினம் தினம் அதன் தரிசனம் கெடச்சாத்தானே எங்க வயிற்றுக்குக் கஞ்சி? அதாலே இன்னொரு நாளைக்குக் கோயிலைப் பார்த்துக்கலாம்னு நான் போகலே! விந்தனின் இத்தகைய அமைதியும ஆழமும் நிறைந்த எழுத்தைத்தான் டாக்டர் மு.வ. பாராட்டினார் மனந்திறந்து பாராட்டினார். 'விந்தன் எய்யும் சொல்லம்புகள் குறி தவறாமல் பாய்கின்றன. சமூகத்தை அவர் சிற்சில இடங்களில்தான் நேராகத் தாக்குகிறார் பல இடங்களில் அவர் அம்பு தொடுப்பதே இல்லை. இன்றிருக்கும் நிலைமையை எடுத்துக் காட்டி, பேசாமல் கதை சொல்கிறார். அவர் படைக்கும் பாத்திரங்களும் பெரும்பாலும் அப்பாவிகளே. அவர்களுக்குச் சமூகத்தின்மேல் வயிற்றெரிச்சல் தோன்றுவதே இல்லை; ஆனால் நமக்கு மட்டும் வயிற்றெரிச்சல் தோன்றுகிறது; ஆத்திரம் பொங்குகிறது.” உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த சோலையப்பன், செய்யும் தொழிலே தெய்வம் எனறு நம்பி அநதத் தெய்வத்தின் தரிசனமே தனக்குத் தினம் தினம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் அதனால்தான ஆண்டவனை வணங்கி வழிடுவதன் மூலம் தன் வாழ்க்கை உயரும் என்று நமபுவதைவிட, உழைபபே உயர்வுக்கு வழி என்கிற உண்மையை உணர்கிறான. அநத உணர்வை உற்சாகத்தோடு வாழ்ததி வரவேற்கவில்லை கிராமத்து மக்கள். அவன் உழைப்பை உறிஞ்சி உயர்ந்தவர்கள் அவனை ஒதுககி வைததனர். வாழத் துடித்த அவனைச் சாதிவெறி மிகுந்த சமூகம் அவனைச் சாவதற்கே வழி காட்டியது! நாடு விடுதலை அடைவதற்கு முன்பே, ஆசிரியர் விந்தன் அவர்களால் எழுதப்பட்ட ஒரே உரிமை என்கிற இக்கதை, இன்னும் நாடு முழுவதும் நாம் காண்கிற கதையாகும்! காலம் மாறிவிட்டது, கருத்து மாறிவிடடது, மனிதனும் மாறிவிட்டான் என்று கவிதைகள் பாடப்பட்ட பேதிலும், இன்றும் தீண்டாமையும் சாதி வெறியும் மாறவில்லை என்பதே உண்மையாகும