பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 விநதன இலக்கியத் தடம் மனித இனமளவு நின்று எவருக்கும் அச்சம் தராமலே பூத நகை நகைத்துக்கொண்டு நிற்கிறார். இளநகை, சிறுதிற உணர்ச்சியலை, பண்பு நயமுடைய வசை ஆகியவற்றால் சமுதாய நலம் விளைக்கும் கலைஞரைப்போல, எழுத்தாளர் விந்தனின் பெருநகை, பெருந்திற உணர்ச்சிகளும் வாசகரைக் கவர்வதுடன் நில்லாமல், அவர்களை மாற்றியமைக்கவே உதவிவிடுகின்றன. பதக்குக் குடித்தவனுக்கு உழக்குத் தேறுவது உறுதி என்ற நெறிப்படி, அவருடைய பாரித்த உணர்ச்சிகளும் படிப்படியான, ஆனால் உறுதி வாய்ந்த கருத்து மாற்றம், பண்பு மாற்றம், மரபு மாற்றங்களும் வாசிப்பவர் உள்ளங்கள் தோறும், வாசிப்பவர் சமுதாய முழுவதும் ஏற்படுத்திவிட வல்லவையாய் உள்ளன. எழுத்தாளர் விந்தனை ஒரு கொள்கைப் பரப்பு எழுத்தாளன் அல்லது ஒரு குறிக்கோள பரப்பு எழுத்தாளன் என்று கூறுவதைவிட ஒரு கருத்துப் பரப்பு எழுத்தாளன் என்று கூறுவதே முறை ஆகும். ஏனெனில் கொள்கைப் பரப்பு எழுத்தாளர், குறிக்கோள் பரப்பு எழுத்தாளர் சமய மொழி நாடு என்றோ, கட்சி வகுப்பு என்றோ, கொள்கை கோட்பாடு என்றோ பிரிவுற்றுக் கிடக்கும் எத்தனையோ குழுக்களுக்குள்ளாக ஒருகுழு சார்ந்து நின்று மற்றொன்றை அல்லது மற்றவற்றை எதிர்ப்பவராக அமைவதே இயல்பு. அவர் ஊட்டும் உவப்பு உவர்ப்புகளும் மனமாற்றங்களும் இதுபோல ஒரு திசையில் உவப்பும் மறுதிசையில் உவர்ப்பும், ஒரு பக்கம் மாற்றமும் மறுபக்கம் எதிர்மாற்றமும ஆகவே இருத்தல் கூடும். பேராசிரியர் கல்கி இதனாலேயே அவர் எழுத்தாற்றலைக் குறிப்பிடும்போது அதன் மறைதிறவு அதன் கட்சி வகுப்பு முதலியவை கடந்த சார்பற்ற தன்மையே எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிக்கோள்கள் அவருக்கு உரிய தனிக் குறிக்கோள்கள். அவர் கருத்துகளும் அப்படியே, அவர் "நறுக், "நறுக்' என்ற குட்டுக்கள் வாசக அன்பர்கள் எவரையும் பண்படுத்தாததன் புதிர் விளக்கம் இதுவே. அவர் குறிக்கோளும் கருத்தும் மனித இனமளாவிய ஒரு வள்ளுவக் குறிக்கோள், வள்ளுவக் கருத்தே யாகும்.