பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 21 வறுமையிடையேயும் சமுதாயத்தின் அடித்தட்டுக்குரிய தொழிலாளரிடையேயும் வாழ்நதவர் விந்தன். ஆனால் இதுகூட, அவர் சமுதாய நோக்கை இனநோக்கை விரிவுபடுத்தி உள்ளார்ந்த மனித இன, உயிரின நேச பாசத்தை வளர்த்ததேயன்றி வகுப்பு வேறுபாட்டுணர்வை உண்டுபண்ணவில்லை. 'அலிபாபாவும் நாற்பது திருடரும் என்ற அரபிக் கதையில் வரும் மார்ஜியானா, ஒரு வீட்டின் வாயிற் கதவில் இடப்பட்ட சுண்ணக் குறியைத் தெருவெங்கும் இட்டு வேறுபாட்டடையாளத்தை அழித்தது போல, எல்லா விருப்பு வெறுப்புணர்ச்சிகளையும் குறுகிய எல்லைகளில் தேங்காமல் பாரித்த பேரகல் இன எல்லையளாவ நோக்கியதன் மூலமே எவரையும் தனிப்பட்ட முறையிலோ நாடு வகுப்பு மொழி கொள்கை முறையிலோ, பாலின வேறுபாட்டடிப் படையிலோ கூட புண்படுத்தாது, வெறுப்பூட்டாது, சினம் கொள்விக்காது எல்லாரையும் ஒரே உணர்ச்சி ஒருமைப்பாட்டில் ஆட்கொள்ள அவரால் முடிந்தது. இறுதியாக, விந்தனின் திட்டமிடாத கலை வரம்பு கருதாத போக்கிலேயே அவரையும் அறியாமல் ஓர் ஆழ்ந்த திட்டமும் வரம்பும் கலைத் திட்பமும் வந்து அமைந்து விடுவதனை வாசகர் காணலாம் ஆனால் இதிலும் ஒரு புதிர் உண்டு பொதுநிலை எழுத்தாளர்களிடமும் மிக உயரிய கலை எழுத்தாளர்களிடமும் காணப்படும் கலை நோக்கை விட, கதை நோக்கை விட, அவரிடம் கருத்து நோக்கும் கருததுக் கொந்தளிப்புமே மிகுதியாயிருந்ததால், மேலே கூறப்பட்ட உள்ளார்ந்த கலை அமைதி வரம்பையும் அறவே மீறி அவர் புயலார்ந்த கருத்துகள், அணைகளையும் கரைகளையும் உடைத்து அவரையும் இழுத்துச் சென்றுவிடும் இடங்கள் உண்டு. கனகலிங்கததினிடம் அகல்யா கற்பு பற்றி, ஆண் பெண் தொடர்பு பற்றிச் சொற் பெருக்காற்றும் இடங்களில் சில பல இத்தகையவையேயாகும். சே.சுப்பியர் போன்ற இயற்பெருங் கவிஞர்களிடத்தில் இத்தகைய இலக்கண மீறல்கள், கலை மீறல்கள் கூட, ஒரு புதிய கலை நுட்பத்தை, இலக்கண மரபைப் படைத்துவிடுகின்றன என்று ஆய்வாளர் கூறுவர். விந்தன் வகையில் இம்மீறல்கள் இவ்வாறு எளிதில் விளக்கக் கூடியவையல்ல. ஏனனெனில் அவை நாடகப்பாங்குடையவை