பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 23 குப்பைகளையே கீழையுலகம் பொதுவாக, தமிழகம் சிறப்பாக இன்று கலையிலும் எழுத்திலும் திரையும் பின் பற்றி வருகிறது. இந்த நிலையில் தலை சிறந்த இயற் கலைஞர்கள் இந்தியாவிலும் தமிழகத்திலும் தோன்றாமல் இல்லை. ஆனால் ஒரு மரமும் தோப்பாகாது; ஒரு பிள்ளையும் பிள்ளையாகாது. தமிழகத் தேசிய மரபும், இந்தியத் தேசிய மரபும் படைப்பாளரிடமும் மாற வேண்டும், வாசகரிடையேயும் மாற வேண்டும். யார் முதலில் மாறுவது என்பது இங்கு முக்கியமல்ல. ஏனெனில் கீதையில் கண்ணபிரான் கூறியதுபோல, படைப்பாளனாகிய என் படைப்பிலும் அவலங்கள் நேர்ந்துவிடுகின்றன. ஆனால் படைப்பின் அவலம் என்னையும் சில சமயம் தாக்கிவிடுகிறது. பள்ளி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கலைக்கூடங்கள் தற்காலத் திரைப்படங்களின் அவல வாழ்வைப் பின்பற்றி விடுகின்றன. ஏழ்மையிலுள்ள மக்கள் செல்வர்களின் நல்வாழ்வையன்று, அவல வாழ்வைப் பின்பற்ற எண்ணி வருகின்றது. இந்நிலைகள் மாற ஒரு விந்தன் போதாது, ஒரு விந்த மரபே இமய மரபாக வளரவேண்டும். 1982