பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 விந்தன் இலக்கியத் தடம் பாத்திரங்களுக்கும் எமக்கும் கால இடைவெளி மிகுதியாக உள்ளது. இதிகாசப் பாத்திரங்கள் எவ்வளவுதான் நவீன மொழியிற் பேசினாலும் கற்பனைப் படைப்புக்களாகவே இருப்பன. அவற்றுக்கும் எமது காலத்துக்கும் குறிப்பிடத்தக்க தொடர்பு காண்பது இயலாது. அது மட்டுமல்ல. பழைய நிலமானியச் சமுதாயத்தில் வழுக்கி விழுந்தவர் நிலை வேறு. எமது முதலாளித்துவ சமுதாயத்தில் வழுக்கி விழுந்தவர் நிலைமை வேறு. எனவே அகலிகையை வழுக்கி விழுந்த வளாக நோக்கினாலும் பயனுள்ள (էք եւ ճւլ கிடைக்கப்போவதில்லை. பன்னெடுங் காலமாகப் பெண்ணினத்துக்குக் கொடுமை இழைக்கப்பட்ட தைத் தவிர, அதன் தன்மையும் முறைகளும் காலத்துக்குக் காலம் மாறுகின்றன. இவற்றை உணர்ந்த நிலையில் பாலும் பாவையும் எழுதியுள்ளார் விந்தன். இத்தகைய நாவல்களைச் சிலர் இலட்சிய நாவல்கள் என்பர் அது எவ்வாறாயினும், வ.ரா. எழுதிய நாவல்களின் வழி வந்தது பாலும் பாவையும் என்பதை மறுப்பதற்கில்லை. அகல்யை கல்லூரி மாணவி, சகமானவரான தசரதகுமாரன், இந்திரன் ஆகிய இருவரில் அறியாத தசரத் குமாரனைக் கைவிட்டு, அறிந்த ரசிகன் இந்திரனுடன் காந்தர்வ விவாகஞ் செய்ய ஓடிப் போகிறாள். வெறுங்கையாக வந்த அகலிகையை இந்திரன் கை விட்டுச் செல்கிறான். கனகலிங்கம் பலத்த தர்மவிசாரத்துக்குப் பின்பு அகலியைக் காதலிக்க மறுத்துக் கொல்வதைவிடக் காதலித்தே கொல்லலாம் என்று கேலியாகக் கூறிக்கொண்டு காப்பாற்ற முன்வருகிறான். ஆள்மாறாட்டத்தின் பயனாகக் கனகலிங்கம், அகல்யையின் சித்தப்பாவின் சூழ்ச்சியாற் சொல்லப்படுகிறான். இக்கட்டான சமயத்தில் அகல்யாவின் சாபத்தைப் போக்க வந்த சாட்சாத் பூரீராம பிரானைப் போல, தசரத குமாரன் கையில் கோதண்டம் இல்லாமல்’ எதிரே வந்து, வாழ்நாளிலேயே முதன்முறையாகத் துணிந்து அவளைக் காப்பாற்ற முன்வருகிறான். ஆனால் வீட்டுக்குப் போனதும், ‘கெட்ட பாலை எடுத்துச் சாக்கடையிலே கொட்ட வேண்டியதுதான்' என்று தத்துவம் பேசும்