பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 33 ரிஷிபத்தினிகள் ஏறத்தாழ இவ்வாறுதான் பழிச் சொற்களை வீசினார்கள். எவ்வளவுதான் உயிராசை இருந்த போதும் இறுதியில், 'கடைசி நம்பிக்கையும் இழந்து கதியற்று, இனித் தனக்குச் சாவதைத் தவிர வேறு வழியே கிடையாது’ என்ற நிலைக்கு வருகிறாள். ‘எச்சில் இலைக்கு நேரும் கதிதான் இனி நமக்கும் நேரும் போலிருக்கிறது என்று ஏங்குகிறாள். நாவலின் முடிவிலே நிர்க்கதியாய், வா வா என்று கை தூக்கி வரவேற்கும் அலை கடலை நோக்கி ஓடுகிறாள். அதாவது சமூகத்தின் அனுதாபத்தைச் செத்துத்தான் பெற வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறாள். ‘நல்லவர்கள் வாழ்வதில்லை, நானிலத்தின் தீர்ப்பு என்று முடிவுரை கூறி நாவலை முடிக்கிறார் விந்தன். கூட்டு மொத்தமாகப் பார்க்கும்போது இதிகாசப் பாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் நுட்பமான முறையில் ஏளனத்துக்குக்குரியனவாக்கி விடுகிறார் ஆசிரியர். அதற்கு அவரது தொனி விசேஷங்கள் பெரிதும் பயன்படுகின்றன. ஒரு கட்டத்தை மாத்திரம் இங்குக் கவனிப்போம். கனகலிங்கத்தைக் கொலை செய்வித்தது தனது சித்தப்பா என்றறிந்த அதிர்ச்சியுடன் தனது வீட்டை விட்டு மெதுவாக வெளியேறும் அகல்யா, தெருவில் விழுந்து விட்டாள். இனி விந்தனின் வருணனையைப் பார்க்கலாம். "அதே சமயத்தில் தன்னை மறந்து வந்து கொண்டிருந்த யாரோ ஒருவன் அவள் மேல் இடறி விழுந்தான்.” "ஐயோ! என்று அகல்யா முனகினாள். “மன்னியுங்கள் என்று பல்லை இளித்துக் கொண்டே அவன் எழுந்து நின்றான். 'அகல்யா தலைநிமிர்ந்து அவனைப் பார்த்தாள். என்ன ஆச்சரியம்! அவளுக்கு எதிரே ரிஷிபத்தினியான அகல்யாவின் சாபத்தைப் போக்க வந்த பூநீராமனைப்போலத் தசரத குமாரன் கையில் கோதண்ட மின்றி, பக்கத்தில் லகஷ்மணன் இன்றி நின்று கொண்டிருந்தான்.