பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் வாழ்க்கைக் குறிப்புகள் செங்கற்பட்டு மாவட்டம் நாவலூர் என்னும் சிற்றுரில் 22 091916இல் ஜானகியம்மாள் - வேதாசலம் தம்பதிகளின் முதல் மகனாகப் பிறந்தார் (வி கோவிந்தன் - உடன் பிறப்பு சாமிநாதன் என்கிற இளவல் மட்டுமே சென்னை சூளை பட்டாளம் பகுதியில் வாழ்ந்து வளர்ந்தவர் ஆரம்பப் பள்ளியுடன் கல்வியை முடித்துக் கொண்டு, கருமான் பட்டறை வேலை, ஓவியக் கல்லூரியில் ஒவியம் பயிலுதல் ஆகியப் பணிகளில் ஈடுபட்டு தம் இருபதாவது வயதில் 1936இல் டாக்டர் மாசிலாமணி முதலியார் நடத்திய தமிழரசு அச்சகத்தில் அச்சுக் கோர்ப்பவராகச் சேர்ந்தார். தமிழரசு பத்திரிகையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய தமிழுக்கு அமுதென்று பேர் என்ற கவிதையை முதன் முதலில் அச்சுக் கோர்த்தவர் விந்தன் அவர்களே 1942 இல் கல்கி, அச்சகத்தில் அச்சுக் கோர்ப்பவராகப் பணியில் சேர்ந்தவர், அப்பத்திரிகையில் பத்து ஆண்டுகள் துணையாசிரியராக வேலை பார்த்தார் பல புகழ் பெற்ற சிறுகதைகளை எழுதியதோடு பாலும் பாவையும்’ என்ற புகழ் பெற்ற நாவலையும் எழுதினார் 1946இல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் அளிக்க முன் வந்த பரிசை விந்தனின் சிறுகதை தொகுப்பான முல்லைக் கொடியாள் என்னும் நூலுக்கு முதன் முதலாக அளித்து பாராட்டியது நாற்பதாண்டு இலக்கிய வாழ்க்கையில் விந்தன் பெற்ற ஒரே பரிசு தமிழ் வளர்ச்சிக் கழகம் அளித்த பரிசு தான் முதலும் கடைசியுமாகும்!