பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 43 முதலாளித்துவ வளர்ச்சிப்போக்கில் தொழிலுற்பத்தி மையங்களின் வளர்ச்சியும், அத்தகைய வளர்ச்சியில் நகரங்கள் (townships) பெறும் இடங்கள், இப்படியான நகரங்களில் அடிநிலை மக்களின் பாட்டாளிகளாக்கப்படுவது (proletarianization) மிக முக்கியமான ஆரம்பநிலைக் கட்டங்களாகும். இத்தகைய அபிவிருத்திகளின் பின்னரே உண்மையான வர்க்கப்பிரக்ஞை &sjLGub. (Class conseionsess) இலக்கிய வளர்ச்சியைப் பொறுத்தவரையில், முதலாளித்துவ வளர்ச்சியின் பின்னர் அத்தியாவசியப் படுத்தப்பெறும் யதார்த்தவாதம் (Realism) வர்க்க உணர்வு முனைப்புப்படுத்தப்படும் நிலையில், அதாவது உண்மையான வர்க்க நிலைப்பட்ட போராட்டம் நடக்கும் வரையில், விமர்சன யதார்த்தவாதமாகவே (Critical Realism) இருக்குமென்பர். சோஷலிச யதார்த்தவாதம் இதன் பின்னரே வரும். சிலர் அது சோஷலிசப் புரட்சியின் பின்னரே வரும் என்பர். விந்தன், கடைநிலைப்படுத்தப்பட்ட நகரத்துப் பாட்டாளிகள், கீழ் - மத்தியதர வர்க்கத்தினரையே தனது கதைப்பொருளாகக் கொண்டமையாலும், அந்தக் குழுவினர் தமது குழுமத்தின் தனித்துவத் தேடல் பற்றிய இன உணர்ச்சிவாத அரசியல் வழி செல்வதை ஏற்றுக் கொள்ளாதிருந்தமையாலும், தன்னை அறியாமலே விமர்சன யதார்த்தவாதியாக வேண்டிய நிலமையேற்பட்டது. இனவாத அரசியலின் அகப்போலித்தன்மையை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் அவர் வாழ்க்கையிலே இருந்தன. பிற்காலத்தில் தமிழ் அரசுக் கழகம், தி.மு.க. போன்ற கட்சிகளின் முக்கியஸ்தர்களாக முகிழ்ந்தோருட் சிலர் இவருடன் ஆரம்ப காலத்தின் அச்சுக் கோப்பாளர்களாக இருந்தனர் என அறியக் கிடக்கின்றது. விந்த னின் இலக்கியப் பண்புகளென எடுத்துக் கூறப்படத்தக்க, மேற்பூச்சுள்ள பள பள வாழ்க்கையின் அடிப்படையான போலித் தன்மையை இனங் கண்டறியும் திறன், சமூகத்தின் பொருளாதார சமமின்மையை அழுத்தம் திருத்தமாகக் காட்டும் திறன் ஆகியவை அவர் எடுத்துக் கொண்ட கதைக் களத்தின் அடியாகவே வருவன என்பது நுண்ணியதாக ஆராயும் பொழுது தெரியவரும்.