பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 59 எழுததாளர்கள் உண்டு. முற்றிலும் கற்பனை வயப்பட்ட அல்லது அகலப்படுத்தப்பட்ட சிறு கதைகளைப் படைத்தவர்கள் ஏராளமாகத் தமிழ்ச் சிறுகதை உலகில் உள்ளனர்; இந்த முரண்பாடுகளைக் காணாமல் மேல் போக்காகத் தென்படும் சமூக நடப்புகளை உள்ளவாறே சித்திரிக்கும் சிறுகதையாசிரியர்களும் உள்ளனர்; இந்த முரண்பாடுகளினால் எழும் பிரச்சினைகளை வன்மையாகச் சாடி, கேலியும் கிண்டலும் செய்யும் எழுத்தாளர்களும் உள்ளனர்; இவற்றைச் சமூக ரீதியில் புரிந்து கொண்டு, எந்த வர்க்கம் முற்போக்கானதோ அதன்பால் நின்று எழுதும் சார்பு நிலை எழுத்தாளர்களுள்ளனர். இந்தப் போக்குகள் தமிழ்ச் சிறு கதையில் கடந்த 60 ஆண்டுகளாக இடம் பெற்று வரும் சமூக நிகழ்ச்சிகளின் பிரதிபலிப்பேயன்றி வேறில்லை. இதில் விந்தன் எந்தப் பிரிவை அல்லது அம்சத்தை மிகவும் அதிகமாகப் பிரதிபலிக்கிறார் என்பதைக் காண்போம். விந்தன் சிறுகதைகள், நாவல்கள் எல்லாமே, ஒரு குறிப்பிட்ட நோக்கிலிருந்து அவரால் படைக்கப்பட்டவை. அவரது நோக்கம் என்ன என்பதை அவருடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்திலிருந்தும், இலக்கிய நோக்கிலிருந்தும் நாம் கண்டுகொள்ள முடிகிறது. வாழ்வின் கசப்பான அனுபவங்களை முழுவதுமாகப் பெற்றவர் என்ற காரணத்தினால் அவர் வாழ்வு நோக்கு என்பது மிகத் தெளிவாக உருவாகியுள்ளது. அவர் சாதாரண மனிதனுக்காக இலக்கியம் படைக்கப் புகுந்தவர். இதன் அடிப்படையில் உலக இயக்கங்களை மிகப் பொதுவாக இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் காணும் மனப்போக்கு அவரிடம் உள்ளது. உழைப்பவனுக்கும், வீனில் உண்டு களித்திருப்பவனுக்குமான போராட்டமாக உலகைக் காண்கிறார் விந்தன். அவர் கூறுகிறார் : "ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் நம் உழைப்புக்கேற்ற மதிப்பு - அந்த மதிப்பைப் பெறுவதற்குத்தான் இன்று கடவுளுடன் நாம் போராடுகிறோம்; மதத்துடன் நாம் போராடுகிறோம்; கலையுடன் நாம் போராடுகிறோம்.