பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 விந்தன் இலக்கியத் தடம் "இந்தக் கடுமையான போராட்டத்தில் நாம் வீழ்ந்தாலும் சரி, நம் சந்ததிகளாவது வாழவேண்டும்.’ (சமுதாய விரோதி - 7-8) இந்தப் போராட்டத்தில் விந்தன் மிகத் தெளிவாக ஒரு நிலை உள்ளவராகவே காணப்படுகிறார். எந்த ஒரு இடத்திலும் அவர் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்ட எழுத்தாளராகத் தன்னைக் காட்டிக் கொள்ளாவிட்டாலும் ஏழைகள், மத்திய வர்க்கத்தில் கடை நிலையில் உள்ளவர்கள் ஆகியோரின் உரிமைக் குரலை அவர் எதிரொலிக்கிறார். மேல் தட்டு மக்களின் வாழ்வை அவர் நிராகரிக்கிறார். 'அய்யா, பொய்யும் புரட்டும் இல்லாத லோ சர்க்கிள் எனக்குப் போதும் - அவர்கள் வாழ்ந்தால் நான் வாழ்வேன்.” (ஏமாந்துதான் கொடுப்பீர்களா? - 8) இந்த முறையில் சமூகத்தில் தாழ்ந்த மட்டத்தில் வாழ்பவர்கள் சார்பில் நிற்பவராக விந்தனின் வாழ்வு நோக்கு அமைந்துள்ளது. இவ்வாறு கூறும்பொழுது அவரை ஒரு சோஷலிசவாதி என்று கூறிவிட முடியாது. இருந்த போதிலும் சோஷலிசக் கோட்பாடுகளை மனிதாபிமான நோக்கில் ஏற்றுக் கொண்டவராக விந்தன் விளங்குகிறார். அவருடைய 'காதலும் கல்யாணமும் என்ற நாவலில், ஆப்த சகாயம் என்பவருடன் மணி என்ற வாலிபன் பேசுகையில் பின்வருமாறு கூறுகிறான் : 'சோற்றுக்கு இருக்கும் பலல்கள் கூட இப்போது அதைப்பற்றி ‘சோஷலிசம்’ பேச ஆரம்பித்து விட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது போல் இருக்கிறது. ஏனெனில் அவர்களும் புரிந்துகொண்டுவிட்டார்கள் (பக். 225) இந்த மேற்கோள்கள் விந்தனுடைய வாழ்வு நோக்கைத் தெளிவாக்கப் போதுமானவை. வாழ்வு நோக்கில் விந்தன் ஒரு மனிதாபிமானியாகவும், அந்த நோக்கில் சமத்துவத்தை வரவேற்பவராகவும் காணப்படுகிறார். விந்தனுடைய இலக்கியக் கோட்பாடு இந்த வாழ்வு நோக்கின் அடிப்படையில் உருவானபடியால், அதன் அம்சங்கள் முற்போக்கு முத்திரை பெற்று விளங்குகின்றன. விந்தன் மணிக் கொடி