பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 63 புஷ்பராஜ் விளங்குகின்றான். இங்கு புஷ்பராஜ் அதர்மத்தை எதிர்த்துப் போராடும் ஒரு இதிகாசத்தன்மையுள்ள பாத்திரமாக விளங்குவதைக் காண முடிகிறது. புஷ்பராஜுக்கும், வேறு ஒருவருக்கும் நிகழும் உரையாடல் இதைத் தெளிவாக உணர்த்துகிறது. "அவர் எனக்கு விரோதியில்லை.” ‘பின்னே யாருக்குத் தம்பி விரோதி? ‘சமுதாயத்துக்கு விரோதி.” "சொந்த அப்பாவைவிட, சமுதாயம் பெரியதா? "அப்பாவைவிட, அரசாங்கத்தைவிடப் பெரியது.” (சமுதாய விரோதி பக். 30) இதே வரிசையில் உள்ள பல கதைகளை விந்தன் எழுதியுள்ளார். சமுதாயத்தை ஏமாற்றித் திரியும் ஒரு கதாபாத்திரமாக எங்கள் ஏகாம்பரம் என்ற கதையில் ஏகாம்பரம் என்ற கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது. காந்தீயவாதி என்ற கதையில் இன்று உலவி வரும் போலி காந்தியவாதியை விந்தன் அம்பலப்படுத்துகிறார். “காந்திய வாதி' என்ற அவருடைய சிறு கதையின் கதாநாயகன், தோல் மணங்குடி துளசிரங்கராயர், ஊர்க் குழந்தைகளுக்குப் பட்டாசு தானம் செய்கிறேன் என்று அவருடைய வைப்பாட்டிக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார். அத்தனை வைப்பாட்டிகள் அவருக்கு. அவருடைய சுயரூபத்தை குப்புலிங்கம் என்ற கதாபாத்திரம் மூலமாக விந்தன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். "நான் எட்டிப் பார்த்தேன். என்ன ஆச்சரியம், ஏழெட்டுப் பெண்களுக்கு நடுவே எங்கள் ஊர்க்காந்தி எழுந்தருளியிருந்தார். மேலே ஒரு துண்டும், கீழே ஒரு துண்டும் வழக்கமாக இருக்கும் பாருங்கள்; அவற்றைக்கூட மறந்து அவர் எளிமையின் உச்சிக்கே போய் வாய்மையையும், துய்மையையும், பண்பையும், பாரம்பரியத்தையும் அங்கே வளர்த்துக் கொண்டிருந்தார்.’ (விந்தன் கதைகள் - பக். 32)