பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 விந்தன் இலக்கியத் தடம் "அந்தரங்கக் காரியதரிசி என்ற கதை, சினிமா உலகில் நிகழும் ஏமாற்று வித்தைகளைக் காட்டும் கதையாக அமைந்துள்ளது. காரியதரிசி இந்தக் கதையில் ஒரு நாயைப்போல் நடத்தப்படுகிறான். மொத்தமாக இன்றைய சினிமாக் கம்பெனிகளில் பெண்மை எந்த அளவிற்கு வஞ் சிக்கப்படுகிறது என்பதை ஆசிரியரின் இக்கூற்று தெளிவாக்குகிறது. இவ்வளவுதானா நீங்கள்! நேற்று இரவு யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்ற பெரு நோக்கோடு முன்பின் தெரியாத யாரோ ஒரு பெண்ணை முதலாளியிடம் அனுப்பியிருக்கிறார் அவருடைய அரும்பெரும் நண்பர் ஒருவர். அந்தப் பெண் அந்தரங்கக் காரியதரிசியிடம் வந்து ‘முதலாளியைப் பார்க்கவேண்டும்’ என்று சொல்லியிருக்கிறாள். அவளைப் பார்த்த அந்தரங்க காரியதரிசிக்கு அந்த நேரத்தில் எப்படி இருந்ததோ என்னவோ, நான்தான் முதலாளி என்று சொல்லி அவளை அகலிகையாகவும் தன்னை இந்திரனாகவும் பாவித்துக்கொண்டு அந்த இந்திரன் வேலையையும் செய்துவிட்டிருக்கிறார். (ஏமாந்துதான் கொடுப்பீர்களா - பக். 99) இங்கு மிக அழகாக ஒரு காவிய நடையுடன், விந்தன் இந்த நாட்டுப் பெண்மை கடைச்சரக்காக மதிப்பிடப்படுவதை எடுத்துக் காட்டியுள்ளார். இதுபோன்ற பல கட்டங்களில் விந்தன் சமூக உணர்வு மிக்கவராகவும் அதன் குறைபாடுகளைக் கண்டு சாடுபவராகவும் காணப்படுகிறார். இது அவருடைய உலகு நோக்கு, இலக்கியக் கோட்பாடு ஆகியவற்றுக்குப் பொருத்தமான ஒரு அம்சமே ஆகும். விந்தன் சிறு கதைகளைப் படிப்பவர்கள், அவரிடம் இயல்பாகப் படிந்துள்ள மற்றொரு அம்சத்தையும் காணத் தவறமாட்டார்கள். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் மிகவும் தெளிவாக வளர்ந்து வெளித் தோன்றிய முதலாளித்துவ சமூகத்தில், அடக்கு முறைக்கு உள்ளான வர்க்கத்தினரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பல சிறுகதைகளை அவர் எழுதியுள்ளது அந்த அம்சமாகும்.