பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 விந்தன் இலக்கியத் தடம் வேலைகளைச் செய்ய முடியாதவள் என்ற காரணத்துக்காக வெளியேற்றப்படுவதாக அவள் கருதுகிறாள். விற்கப்பட்ட பசுவுக்குப் பதிலாக வேறு பசுவை வாங்கிக்கொள்ள முடியும் என்பதைப் போல், தான் இறந்துவிட்டால் வேறொரு பெண் அந்த வீட்டின் மருமகளாக வரக்கூடும் என்று அஞ்சுகிறாள். ஒரளவு நனவோடை உத்தியைக் கொண்டிருக்கும் இந்த ஆரம்பகாலக் கதையிலேயே விந்தனின் திறமை வெளிப்படுகிறது. கதையின் தலைப்பான மாட்டுத் தொழுவம் என்ற பெயரும் ஒரு குறியீடாக அமைகிறது. ஆத்மநாதன் இறந்துவிட்டபோது தவித்துப்போன குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லப்போனவன், அங்கே தன்னைப் போல் வந்தவர்கள் எல்லோருமே இறந்தவன் உயிருடன் இருந்தால் தாங்கள் அடைந்திருக்கக்கூடிய லாபத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து வேதனையடைகிறான். வருந்துவது யார் - என்ற இந்தக் கதை சம்பவ ஒருமை கொண்ட நல்ல வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மாதச் சம்பளத்தில் வேலை செய்பவர்கள் அன்றாடம் ஏற்படும் செலவுகளைச் சமாளிப்பதற்காகப் படும் அவஸ்தைகளை முதல் தேதி என்ற கதையில் விளக்குகிறார். வறுமை யில் தவிக்கும் கணேசன் குழந்தைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கும், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கும், வீட்டு வாடகை கொடுப்பதற்கும் சம்பள தினமான அடுத்த மாத முதல் தேதியை நம்பிக் கொணடிருக்கிறார். முதல் தேதி வந்தவுடன் சம்பளம் முழுவதும் செலவாகி, மீண்டும் தேவைகளுக்காக அடுத்த மாதம் முதல் தேதியை எதிர்பார்த்திருக்க வேனடிய நிர்ப்பந்தத்தைப் பரிகாசத் தொனியுடன் விளக்குகிறார் விந்தன். குடிசைவாசிகளின் வாக்குகளைப் பெற்று சட்டசபை உறுப்பினராகப் பதவி பெற்ற அரசியல்வாதி, அந்த மக்களின் குடிசைகள் அகற்றப்பட்ட போது சட்டசபையில் அவர்களக்காக வாதாடச் செல்கிறார். ஆனால் அங்கே அவருக்கு மந்திரிப்பதவி