பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 32 - விவாகம்ானவர்களுக்கு - ஹார்மோன் உடம்பில் சில குழலற்ற கோளங்கள் உள. அவை ஒவ்வொன்றும் ஒரு விதமான நீரைச் சுரக்இன்றது. அதையே ஆங்கிலத்தில் 'ஹார்மோன்' என்று சொல்லு கிரு.ர்கள். இந்த வஸ்துக்களே உடம்பிலுள்ள சகல உறுப் புக்களையும் சரிவர வேலை செய்யும்படி நடத்தி வருகின்றன. அதனல் ஆராய்ச்சியாளர்கள் சினைப்பைதானே முட்டை யைத் தயார் செய்து கர்ப்பத்துக்கு விதை துளவுகிறது, அதை எந்தக் கோளம் நடத்துகிறது, அதன் மூலமாக கர்ப்புத் தடை உண்டாக்க (Մւգ-պւDո` என்று ஆலோசனை செய்தார்கள். ஆஷிம் ஜாண்டெக் என்பவர் கர்ப்பமுற்ற பெண்ணின் மூத்திர்த்தில் காணப்படடதும், மூளையின் - அடிபாகத் திலுள்ள் பிட்டுட்டரி ' என்னும் கோளத்தில் சுரத்கப் பட்டதுமான நீரை எடுத்து ஒரு பெண் சுண்டெலிக்கு இஞ் ஜெக்ஷ்ன் செய்தபொழுது, அதுவரை கர்ப்பமாகாதிருந்த சுண்டெலி உடனே கர்ப்பமுண்டாயிற்று. அதைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் தங்கள் எண்ணம் சரிதான் என்று நினைக்க ஆரம்பித்தார்கள். அதோடு சில ஆண்களும் பெண்களும் பிறவியிலிருந்தே மலடாக உளர். அவர்களுக்குச் சில ஹாம்ோன்களை இஞ் ஜெக்ஷன் செய்தபொழுது அவர்களுடைய மலடு நீங்கி விட்டதையும் ஆராய்ச்சியாளர்கள் கவனித்தார்கள். சில ஹார்மோன்களை மிருகங்கட்கு இஞ்ஜெக்ஷன் செய்தபொழுது, அவைகள் கொஞ்ச காலத்துக்கு மலடாய் விட்டன. இதுவும் ஆராய்ச்சியாளர்க்கு ஒரு யோசனைக் கரு வியாய் அமைந்தது. மூளையின் அடிப்புறத்தில் 'பிட்டுட்டரி"' என்ற ஒரு கோள்ம் உளது. அது இரண்டு விதமான நீரைச்சுரந்து இரத்தத்தில் கலந்து அனுப்புகிறது. அவை சினைப்பையை அடைந்ததும் ஒன்று காம ஹார்மோனையும் மற் ருென்று கர்ப்ப ஹர்மோனையும் சிருஷ்டி செய்யும்படி சினைப்பையை நடத்தி வைக்கின்றன. மற்ற மிருகங்களிடம் இந்த இரண்டு ஹர்மோன்களும் மாறி மன்றியே வேலை செய்கின்றன். ஆனல் மனிதர்களிடம்