பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 - விவாகமானவர்களுக்கு - சாதாரணமாக ஆண்களும் பெண்களும் ஒழுக்கமாக நடப்பதிலேயே ஆசை யுடையவர்கள். அப்படியேதான் நடந்தும் வருகிருர்கள். ஏதோ ஒரு சிலரே எந்தக் காலத் திலும் பிசகான வழியில் நடப்பவர்கள். அவர்களில் சிலர் குழந்தை பிறந்துவிடுமே என்று பயந்து அந்த வழியில் செல்லாதிருக்கலாம், ஆலுைம் சம்போகம் செய்தால்தான விபசாரம்? அதை உள்ளத்தால் உள்ளலும் விபசாரம் தானே. அப்படி மனதில் அழுக்குடைய சிலரைக் காரியத்தில் றங்கவொட்டாமல் செய்துவிட்டால் மட்டும் ஒழுக்கம் அதிகரித்துவிடுமா? அப்படிச் சிலரைத் தடுப்பதற்காக அந்த வழியில் செல்லாத தாய்மார்கள் அதிகக் குழந்தைகள் ப்ெற்று அவதிப்படவேண்டுமா? அத்துடன் கத்தியைக் கழுத்தறுக்க உபயோகிக் கிருர்கள்: என்பதற்காகக் கக்தி செய்வதையே நிறுத்தி விடலாமா? மேலும் இந்த மாதிரி, குழந்தை பிறந்துவிடும் என்று பயமுறுத்தி உண்டாககும ஒழுககமும உண்மையான ஒழுக் கமாகுமா? இது சரி, இது தவறு என்று அறிந்து ஒழு குவதுதானே உண்மையான ஒழுக்கம்? அப்படி அறிந்து ஒழுகுகிறவர்கள் கர்ப்பத்தடை முறைகளால் தவருக நட்க்க முடியும் என்று எண்ணி அதில் இறங்கிவிட மாட் டார்கள். அதுவுந் தவிர தவருக நடக்க விரும்புகிறவர் களில் பலர் கர்ப்பத்தடை முறைகளை நாம் சொல்லாமலே தெரிந்து குழந்தை உண்டாகவொட்டாமல் செய்யா தவர்கள் குழந்தை உண்டானபின் கருச் சிதைக்கவோ அல்லது குழந்தை பிறந்தபின் அதைக் கொல்லவோ செய் கிரு.ர்கள். கர்ப்பத்தடை முறைகளைத் தெரிந்திருந்தால் கூட்ாவொழுக்க்த்தில் ஈடுபட்டாலும் இந்தப் பெரிய்" குற்றங்களைச் செய்யமாட்டார்கள். அதுமட்டு மன்று அவiர்கள் குழந்தை பெற்று அவைகளைக் கொல்லாமல் இருந்து விட்டால், அந்தக் குழந்தைகளை நாம் 'சோரத்தில் பிறந்தவர்கள்' என்று இழிவாகப் பேசுகிருேம், அதுவும் நிற்கும். அந்தக் குழந்தைகள் சாப்பாட்டுக்குத் திண் ட்ாடுமே, அதுவும் நிற்கும். ஆணும் பெண்ணும் தவறு செய்தால் அதற்காக அவர்களுடைய குழந்தைகள் தண்டனை பெற வேண்டுமா? இன்னும் கர்ப்பத்தன்ட முறைகள் தெரிந்: திருந்தால் சோரமுறையால் பரவிவரும்கிர்ந்திநோயும் பரவாமல் நின்று. விடும், அது தனி மனிதனுக்கும் சமூகத் துக்கும் எவ்வளவு பெரிய நன்மையாகும்?உலகில் காணப் ப்டும் பல நோய்களுக்கு இந்தக் கிரந்தி நோயே மூல