பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. - விவாகமானவர்களுக்கு - இப்படிப் பிரசவங்கள் இடையில் போதுமான கால மில்லாமல் ஏற்பட்டுக் கொண்டிருக்குமானல் பிரசவுந் தோறும் சிரமம் அதிகப்பட்டுக்கொண்டே வந்து இறுதியில் அவளுடைய உடல் சோர்வு நீங்கிச் சுகம் பெருமலேபோகும், வயிற்றுத் தசைகள் அதிகமாகத் தளர்ந்து போய்த் தொங்க ஆரம்பிக்கவே கர்ப்பப்பை இடம் மாறி இருக்க நேரிட்டு அதன் பயனக ஓயாத முதுகுவலியும் நோயும் உண்டாய்விடும். அடுத்த பிரசவத்தில் குழந்தை கர்ப்பப் பையில் சரியான நிலையில் இருக்க முடியாது. அப்பொழுது சுகப்பிரசவம் உண்ட்ாகாது. வேதனையும் அதிகமாயிருக்கும். அநேக சமயங்களில் கர்ப்பப்பையின் கழுத்தில் கீறல் ஏற்பட்டு 'கர்ப்பப்பைப் புற்று' என்னும் பயங்கரமான் வியாதியும் உண்டாகி அகால் மரணம் சம்பவிக்கவும் செய்யும். ஏதோ சில பெண்களே அடுத்தடுத்துக் குழந்தைகள் ஈன்று ஆரோக்கியம் கெட்டுக் கஷ்டப்பட்டாலும் உயிருடனிருப்பர். மற்றவர்கள் இரண்டு மூன்று குழந்தைகள் பெற்றதுமே யமனுக்கிரையாகி விடுகின்றனர். அடுத்தடுத்துக் குழந்தைகள் பெறுவதால் அன்னை ன் உடல் கெடுவதும் உயிரழிவதும் மட்டுமன்று: அடுத்தடுத்து வரும் அந்தக் கு ழ ந் ைத யி ன் நிலைமை என்ன? சவலைக் குழந்தைகள் என்பார்கள் அவைகளைப் பாத்தவர்கள் அறிவார்கள். கைக்குழந்தை ஒன்றை வைத்துக்காத்து ரட்சிப்பதே கஷ்டமான காரியம். அவ்விதமிருக்க, இரண்டு மூன்று பச்சைப்பசலைகளை ஏககாலத்தில் வளர்த்துக் காப்பது எப்படி ? அதுவும் தொடர்ந்து வந்த கர்ப்ப்ங்களால் உட்ல் நலம் குன்றிநிற்கும் அன்னை அடுத்தடுத்துக் குழந்தைகள் பெறும் தம்பதிகள் தங்களுக்குக் கேடு தேடுவது போலவே, தங்கள் குழந்தை களுக்கும் துரோகம் செய்தவர்கள் ஆவார்கள் அல்லாவா ? அடுத்தடுத்துக் குழந்தைக்ள் பிறந்தால் தேக சுகமும் தேத பலமும் குன்றியே பிறக்கும். அவை அதிகநாள் உயிரோடிருப்பது துர்லபம். உயிரோடிருந்தாலும், அந்த உயிர் உள்ச்லாடிக்கொண்டு தானிருக்கும். உடல் வளமும் உரமும் பெற்று வளராது. எப்பொழுதும் நோயும் நொடியு மாகவே, நொந்து நொந்து சாகாமல் செத்துவரும். ஆனல் இது தர்மமா, நியாயமா? தாம் பெறும் மக்களுக்குச் சரீர சுகமும் பலமும் வழங்குவதன்ருே தாய் தந்தையரின் முதற் கடமை. உண்மைதான். ஆனால் அடுத்தடுத்துக் குழந்தைகள் வந்து விடுகின்றனவே, நாம் விரும்பவில்லையே, கடவுளுக்குக்