பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - விவாகமானவர்களுக்கு - வேண்டிய காலம் அதுவே என்பதில் ஐயமில்லை. இயற்கை யன்னையின் ஏற்பாடு ஒன்றே-அதிக வித்தியாசங்கள் இருக்க நியாயமில்லை. ஆனல் நாம் மக்கள் பெறுவது எந்தக் காலத்தில் ? இன்ன் காலம், இன்ன ருது இன்ன மாதம் என்றில்லை. அநேகர் ஐப்பசி மாதத்திலேயே பிரசவிக்கின்றனர். அல்லும் பகலும் இடைவிடாத மழை, அன்று இரவுதான் பிரசவ வேதனை,Tஅதுவும் குக்கிராமத்தில். வைத்திய உதவிக்கு விஷய மறிந்த் ம்ருத்துவச்சி கிடையாது. அம்பட்டச்சிதான் டாக்டர். அவள் வ்ருவாள். குழந்தை தலை மாறிவரும், டாக்டரைப்போய் அழைத்து விரவும் வழியுல்லை, கையில் காசில்லை, வெளியில் மன்ழ். வைத்தியரைப் போய் அழைத் துவர முடியாது; தாயும் குழந்தையும் வைகுண்டம் போய் விடுவர். ஆனல் இதைத் தடுப்பதற்கு வழியில்லையா ?வஸ்ந்த காலத்தில் பிரசவித்தால் இந்தக் கஷ்டங்கள் ஏற்படாவே ! ஆம், ஆம், ஆனால் அதற்கு வழி உண்டா ? நாம் நினைத்தா கர்ப்பம் வருகிறது, அதுவாக அல்லவோ வந்துவிடுகிறது ? ஆனல் விஷயம் அப்படித்தான? மனித வித்து ஒன்பது மிாதம் ஒருவ்ாரத்தில் மகசூல் தரும் என்பது எல்லோரும் அறிந்ததுதானே?அதனால் மிழை காலத்திலும் பனிக் காலத் திலும் பிரசவம் வேண்டாம்ென்ருல், எந்த மாதங்களில் கர்ப்பம் உண்டாகக் கூடாது என்று அறிந்து கொள்வது கஷ்டமான காரியமன்றே. மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் கர்ப்பமுற்ருல் முறையே ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள்ல் பிரசவம் ந்டைபெறும். ஆனல் இந்த மார்கழி முதலிய மாதங்களில் கர்ப்பம் உண்டாகாமல் தடுக்கும் வழி யாது ? குழந்தைகள் வளர்த்தல் தாய்க்கு நோயில்லை, கலியாணமாய்ச் சில வருஷங்கள் ஆய்விட்டன். குழந்தை வேண்டுமென்ற ஆசையும் எழுந்து விட்டது. நாலைந்து வருஷங்களுக்கு ஒருமுறைதான் கர்ப்பமுறுகிருள். பிரசவிப்பதும் வஸந்த காலத்தில்தான், ஆயினும் அவளுக்கு ஐந்தாறு குழந்தைகள் பிறந்துவிட்டால் என்ன செய்வாள் ? அந்த ஐந்தாறு குழந்தைகளிடம் சரியானபடி கவனம் செலுத்த முடியுமா ?