பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 37° விக்டோரிய மகாராணி பெல்ஜியநாட்டு மன்னனுக்கு கீழ்க்கண்ட கடிதத்தை எழுதினள் : 'அன்புடைய மாமா ! நர்ன் அதிகமான குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்க வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்பமாட்டீர் கள் என்று எண்ணுகின்றேன். குடும்பம் பெரிதானல் எனக்குக் கஷ்டம், நாட்டுக்குக் கஷ்டம் என்பதை அறிவீர் கள். ஆயினும் பெண்கள் அடிக்கடி பிரசவ வேதனைக்கு ஆளாவது எத்துணைக் கஷ்டம் என்பதை ஆண்கள் கொஞ்சங் கூடச் சிந்திப்பதில்லை. ’’ இவ்விதம் சூர்யாஸ்தமனம் காணுத பெரிய ஏகாதிபத் தியத்தின் சக்ரவர்த்தினிக்கே ஏராளமான குழந்தைகளைக் கவனிப்பது கஷ்டமாயிருக்குமானல் சாதாரண மக்கள். என்ன செய்வார்கள் ? நம்மில் பணமுடையவர்கள் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளப் பணியாளர்களை நியமிப்பதாக வைத்துக் கொண் டாலும், பெர்டரண்ட் ரஸல் என்னும் பேரறிஞர் கூறும் வண்ணம் பிள்ளைகள் வளர்ச்சிக்குப் பெற்ருேர் கவனம் அன்ருே பிரதானம் ? குழந்தைகள் குறைவாக இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் பெற்ருேரின் அத்தியா வசியமான கவனம் கிடைக்கும். தாய் தந்தையர் தரித்திரர்களாயிருந்து விட்டால் தாதியர் நியமிப்பது எப்படி, குழந்தைகளைக் கவனிக்கச் செய்வது எப்படி ? பெட்டைக் கோழியைச் சுற்றிப் பிள்ளைக் குஞ்சுகள் சூழ்ந்துபோவது போல், தாயைச் சுற்றி இந்த ஐந்தாறு குழந்தைகளும் சூழ்ந்து நிற்பர். ஆனல் காழிக் குஞ்சுகள் கால் கழுவ வேண்டியதில்லை, கைகழுவ வேண்டியதில்லை, வாய்பூச வேண்டியதில்லை, மெய் குளிக்க வேண்டியதில்லை, அவைகளுக்கு ஆடை அணிவது ஏது, அலங்காரம் செய்வது ஏது ? அதனால் பெட்டைக் கோழிக்கு பருந்து கருடன் பற்றிச் செல்லாது பார்த்துக் கொள்ள வேண்டியதைத் தவிர, குஞ்சுகளைப்பற்றி மேற்கொள்ள வேண்டிய கவனம் வேறு கிடையாது. ஆனல் தாயோ ஒவ்வொரு குழந்தைக்கும் பல் துலக்கி, ஸ்நானம் செய்வித்து ஆடை அணிவித்து, உணவு ஊட்டி, பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஓரிரண்டு குழந்தைகள் இருந்தால் ஒழுங்காக இவைகளைச் செய்ய இயலும். பல குழந்தைகள் இருந்தால் அரைகுறையாகவே சய்ய முடியும், குழந்தைகளின் ஆரோக்கியம் குறையும், வளர்ச்சி குன்றும்.