பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 41 கிருர்கள். கணவனைக் கண்டதும் சூரியனைக் கண்ட தாமரை போல் மனைவியின் முகம் மலர்ந்து மகிழ்ச்சி பொங்கி வழிகின்றது. கணவன் சொல் மனைவியின் காதுக்குத் தேவா மிர்தமாய்த் தித்திக்கின்றது. கணவன் கை பட்டால் போதும், கருதரிய'இன்ப வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தாதலே வாழ்வு, காதலின்மையே மரணம் என்று உணர் கின்றனர். காதற் கனியாகக் குழந்தை பெறுகிருர்கள். பிள்ளையைப்பெற்றுப் பேரானந்தம் அடைகிருர்கள். இந்தத் தம்பதிகளைக் கண்டு அக்கம் பக்கத்தார் அழுக்காறடை கின்றனர். இவ்விதம் சில வருஷங்கள் செல்லுகின்றன. ஆனல் இந்த விபதரீம் என்ன? இந்தத் தம்பதிகளுக்குள் ஏன் இந்தச் சச்சரவு? அன்யோன்யமாய் வாழ்ந்த இவர்களிடை இந்த அருவருப்புக்குக் காணம் யாது? நாதன் குரல் நாயகிக்கு நாராசமாய்விட்டதே, ஏன்? கணவன் முகம் காணச் சகிக்கவில்லையே, காரணம் என்ன? காதல் கசந்து விட மனைவிக்குக் கணவன் செய்த துரோகம் என்ன? - குழந்தை வேண்டும் குழந்தை வேண்டும் என்று விரும் பினர்கள். குழந்தை வரவில்லையே, குழந்தை வர வில்லையே என்று கவலைப்பட்டார்கள். கோவில் குளங்களுக்குப் போனர்கள், கடும் பத்திய மருந்துகள் சாப்பிட்டார்கள், தான தர்மங்கள் செய்தார்கள். கடைசியாக, ஒரு குழந்தை பெற்றெடுத்தார்கள். அவர்கள் அடைந்த ஆனந்த்த்துக்கு அளவில்லை. அந்தக் குழந்தையைச் சீரும் செல்வமுமாக் வளர்த்தார்கள். அதை அடுத்தும் குழந்தைகள் வந்தன. மகிழ்ச்சியோடு வரவேற்ருர்கள். ஆனல் இப்பொழுது, மறுபடியும் 'குழந்தை' என்று யாரேனும் கூறினல் சீறி விழுகிருர்கள். போதும், போதும் புத்திர பாக்கியம்’ என்று பொருமுகிருர்கள். மக்கள் வந்து எங்க்ளை வதைப்பது போதும் என்று வருந்து திருர்கள். இதுவும் ஒரு விபரீதம் அல்லவா? மக்கள் வரவில்லையே என்று அப்பெர்ழுது கவலைப் பட்டார்கள் இப்பொழுது மக்கள் வருகின்றன்ரே என்று கவலைப் படுகிருர்கள். இவர்களுக்கு அந்த மக்கள் செய்யும் தேடு என்ன ? மனளன் என்ருலும் மக்கள் என்ருலும் மனைவியின் மனம் அஞ்சுவானேன், நடுங்குவான்ேன், அல்லல் உழப்பானேன்? - a? 3–3