பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 8 I ஆதலால் குழந்தைக்குத் தாய்ப்பாலே சிறந்த ஆகார மாயிருப்பினும் அதற்கு அதிக நாள் கொடுத்து, கர்ப்பத் தைத் தடுத்துவிட முயல்வதால் எவ்விதப் பயனும் உண் டாவதில்லை, அதற்கு மாருக அநேகவிதமான தீமைகளே உண்டாகின்றன. விந்து தடுக்கும் சம்போக முறைகள் குழந்தை உண்டாகாமல் இருப்பதற்காகக் கணவனும் மனைவியும் சம்போகம் செய்யாமல் இருக்கும் பிரமசரியத் தையும் சம்போகம் செய்தாலும் கருத் தரியாத நாட்களேயும் பார்த்தோம். இனித் தொன்றுதொட்டு அனுஷ்டித்துவரும் சில சம்போக முறைகளைக் கவனிப்போம். விந்துவை வெளியே விடும் முறை சம்போகம் செய்யும்பொழுது கணவனுக்கு உணர்ச்சி உச்சஸ்தானம் அடையும்போது விந்து வெளியாகும், அந்த விந்து பெண்குறியில் விழுந்தால் கர்ப்பம் உண்டாக_துது வாகும். அதனல் உணர்ச்சி உச்சஸ்தானம் அடைந்து விந்து வெளியாகும் சமயத்தில் ஆண்குறியை வெளியே எடுத்து விந்தை வெளியே விட்டுவிட்டால் கர்ப்பம் உண்டாகாது என்பதே இந்த முறையின் பொருள். இந்த முறையை அநேகர் பண்டைக் காலத்திலும் கையாண்டு வந்திருக்கிருர்கள். இந்தக் காலத்திலும் கையாண்டு வருகிருர்கள். கர்ப்பப்த்தடை முறைகளில் இதுவே அதிக வியாபகம் அடைந்திருப்பது என்று கூடக் கூறலாம் என்று டாக்டர் ஸ்டோப்ஸ் கூறுகின்ருர், அதற்குக் காரணம் அது சிறந்த முறை என்பதன்று: அதை யாரும் எங்கும் எந்தச் சமயத்திலும் கையாளலாம் என்பதும் அதற்காக எவ்விதமான முன் ஏற்பாடோ. பின் ஏற்பாடோ, செலவோ தேவையில்லை என்பதுமே யாகும். இந்த செளகரியங்கள் எல்லாம் உடையதுதான் இந்த முறை.