பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 95 (4) சீனிக்காரம் - இதுவும் சாதாரணமாக வீடுகளில் நடமாடும் மருந்தே. விலையும் சொற்பமே. எங்கும் கிடைத் கும். நல்ல சுக்கில உயிர் நாசனி. இரண்டு பைண்டு ஜலத் துக்கு ஒரு டிராம் சீனிக்காரமே அளவு, அரை-நிமிஷத்தில் அந்த உயிர்கள் இறந்து போகும், சம்போக இன்பத்துக்கு ஆண்குறியும் பெண்குறியும் இறுக்கமாக வேண்டியது அவு சியம். பல குழந்தை பெற்ற பெண்களுடைய பெண்குறி பெரியதாய்த் தளர்ந்து போயிருக்கும். அப்படிப்பட்ட பெண் குறிகளைச் சீனிக்காரம் சுருங்கச் செய்து எப்பொழுதும் போல் இன்பத்தை அனுபவிக்கச் செய்யும். (5) வினிகர் என்னும் சீமைக்காடி - இது கிறிஸ்தவர் கள் வீட்டில் காணக்கூடியது. விலை அதிகமாயிராது. கெடு தல் செய்வதில்லை. ஒன்றுக்கு இரண்டாக ஜலம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஜலம் குறைவாகவும் காடி அதிகமாக வும், அடிக்கடியும் உபயோகித்தால் மட்டும் பெண்குறியின் உள்ளே உள்ள தசைகள் கட்டியாக ஆகிவிடக் கூடும். அப்படிக் காடி கூடிய ஜலம் ஆண்குறியில் பட்டால் அதில் எரிச்சல் உண்டாக்கவும் செய்யும். (6) லோப் - அநேக ஸோப்புக்களில் காரம் அதிக மாயிருப்பதால் பெண்குறிக்குத் தீமை உண்டாகும். ஆத லால் தேங்காய் நெய் சேர்ந்த ஸோப்புக்களையே உபயோ கிக்க வேண்டும். (7) பொட்டாஸியம் பெர்மாங்கனேட் - இது இங்கி லீஷ் மருந்துக் கடையில் கிடைக்கக் கூடியது. இதுவும் சுக்கில உயிர்களையும் மேகக் கிருமிகளையும் கொல்லும். ஆனல் எவ்வளவு கரைக்கவேண்டும் என்று டாக்டர்களிடம் கேட்டே உபயோகிப்பது நல்லது. (8) போரிக் ஆஸிட் வேலை செய்ய நேரமாவதால் பிரயோஜனமில்லை - லேஸால்' நல்ல சுக்கில உயிர்க் கொல்லிய்ா யிருந்த போதிலும் அளவாக ஜலம் சேர்க்கா விட்டால் உயிருக்குக்கூட ஆபத்து உண்டாக்கிவிடுமாதலால் அதை உபயோகியாமல் இருப்பதே நல்லது. இனி "டுஷ் உபயோகிக்கும் முறையைக் கூறுகிறேன்.