பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 1.3 காலம் : மாலை. இடம் : பஞ்சாப் மாநிலத்தில் ஒரு பாழடைந்த இருட்டுக் குகை. நிகழ்ச்சி : தேச வீரர்கள் புரட்சிக்குத் திட்டமிடுதல். பாத்திரங்கள் : பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, சந்திர சேகர ஆசாத் மற்றவர்கள். பகத்சிங் : பார்த்து விடுவோம். இந்த அநாகரீக அடக்கு முறையின் ஆணவத்தைப் பார்த்துவிடு வோம். வீர சுதந்திரத்தைப் பெற விரும்பி வந்திருக் கும் வெற்றியின் தோழர்களே! வீட்டைத் துறந்து நாட்டைக் காக்க வந்திருக்கும் கல் இளஞ்சிங்கங் களே! பயிர்கள் தோன்றி மறைவது கண்டோம். வீர மக்களாய்ப் பிறந்தோம்; என்ருே ஒருநாள் மடி வது திண்ணம். பசிக்கு உணவு வேண்டுமானுல் அடுப்பு நன்ருக எரிய வேண்டும். அதற்கேற்ற எரி பொருளாக நாம் தயாராக இருக்கவேண்டும். இன்ப மான விடுதலை வேண்டுமென்ருல், துன்பமான தியா கத்தை செய்தே ஆகவேண்டும். பிற்போக்குத்தன மும் பெரும் பேச்சு வித்தையும் பாரத நாட்டை மீட்டு விட முடியாது. எதிரிக்குப் புரிந்த பாஷையில் பேசி ல்ைதான் அவனுக்குப்புரியும். வயதான நம் தலைவர் களை வாய்ச்சாது ரி ய த் தால் ஏமாற்றிவிடுகிருன் வெள்ளையன். இவர்களும் ஏமாந்தபின் ஆண்டவனே என்று அழுகிருர்கள். இப்படிப் பல தலைமுறைகளைப்