பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 வீர சுதந்திரம் திருக்கிருங்க. தயவு செய்து என் மகனே மட்டும் விடுதலை செய் தாயே! (அப்போது மழைக் கோட்டும் தொப்பியும் அணிந்த வண்ணம் பகத்கிங் வருகிருன்) பகத்சிங் : இந்த காட்டின் ஒவ்வொரு தாயும் இப்படித் தானம்மா பிரார்த்தனை செய்கிருர்கள். நீங்கள் உங்கள் மகனே பாரதத்தாயின் பணிக்குக் கொடுக்க விரும்பவில்லை. இதேபோல்தான் எல்லோரும். இப்படி இக்க நாட்டின் அன்னையரெல்லாம் புத்திரபாசத் தால் துடித்தால் பாரத தேவியின் வேதனையை யாரம்மா தீர்ப்பது? - வித்யா : பகத்சிங்? பகத்சிங் : ஏம்மா அழறிங்க கான் வரும்போதெல்லாம் இப்படித் தான் வருத்தப்படுறிங்க. வித்யா : ஆமாம், மகனேக் கண்டதும் ஆனந்தப்பட வேண்டிய தாய் அவதிப்படறேம்பா! அவ்வளவு பெரிய ஆபத்துக்கள் உன்னைத் துரத்துது மகனே! பகத்சிங் : அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா. இப்படி யெல்லாம் உங்களைப் பயமுறுத்துவது துரோகி களின் வேலை. எனக்கு ஒருவித ஆபத்தும் இல்லை: இனிமேலும் வராது. ஏம்மா. உங்கள், மகன்மீது நம்பிக்கையே இல்லையா? இந்த அசட்டுப் போலீஸ் வலையில் மாட்டிக்கொள்ள நான் என்ன அவ்வளவு அறிவற்றவணு அம்மா! சரி ஆபத்தெல்லாம் இருக்கட்டும். பசிக்குதம்மா.