பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 விர சுதந் திரம் துணிச்சல் தாயே! அதுவும் உங்கள் குமாரன் பகத் சிங், தைரியத்தில் அபிமன்யு, வைராக்யத்தில் பீஷ் மன் போன்றவன். சத்திய விரதத்தில் காந்தி மகான் புரட்சியில் லெனின் போன்றவன். வித்யா : சரி. நீங்க போய் பார்த்துட்டு வாங்கய்யா! பகத்சிங்கை பார்க்கணும்னு மறுபடியும் கலெக் டருக்கு எழுதிப் போட்டிருக்கேன். உத்தரவு வர லேன்ன நானும் உண்ணுவிரதமிருந்து சாக றேன்யா. வக்கீல் : அம்மா...தாயே. அப்படியெல்லாம் செய்யா தீங்கம்மா. வித்யா : ஆமாய்யா இவ்வளவு மோசமான நாட்டிலே கான் யாருக்காக உயிர் வாழனும்? மகனே வருவடிக் கணக்கா சிறையிலே. அவன் தகப்பருைம் ஜாமீன் கைதியாயிருக்காரு ஊரைவிட்டு அசையக் கூடாது. தினமும் போலீஸில் ஆஜர் ஆகணும். என் குடும்பமே சுதந்திர தேவியின் பலிபீடத்தில் பலியாகுதய்யா. நானும் கடைசி பலியாயிட்டுப் போறேன். வக்கீல் : எனக்கென்னவோ கொஞ்சம் நம்பிக்கையிருக் கும்மா. மகாத்மா காந்திபோன்ற தலைவர்கள், அர சாங்கத்தோட பேசி சீக்கிரம் ஏதாவது ஒரு நல்ல சமரச முடிவுக்கு வருவாங்க. அப்போ...அரசியல் கைதிகளும் விடுதலையாக வழி பிறக்கும். ங்ான் வரேம்மா. காட்சி முடிவு