பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 21 காலம் : மாலை இருள்-1931-மார்ச் 23. இடம் : துரக்குமேடை நிகழ்ச்சி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும் தூக்கிலிடப்படுதல் பாத்திரங்கள் : பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மாஜிஸ்ட் ரேட், இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள், வார்டன் முதலியோர். (பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் முகத்தை மூடப் பார்க் கிரு.ர்கள். ஜெயில் வார்டன், மாஜிஸ்ட்ரேட் மரம் போல் நிற்கிரு.ர்கள்t பகத்சிங் வேண்டாம். கருப்புத் துணியால் களங்க மற்ற எங்கள் முகங்களை மூட வேண்டாம். ராஜகுரு : உங்களுக்குப் பயமாக இருந்தால் உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள். சுகதேவ் . பயமா? இவர்களுக்கா? இவர்கள் மரணத்தின் கடவுள்கள். கம்மைப்போல் எத்தனையோ பேரைக் கொன்ற எமகாதகர்கள். உயிர்களைக் கொன்று உயிர் பிழைப்பவர்கள். மாஜிஸ்ட்ரேட் : உங்கள் கடைசி விருப்பம்? பகத்சிங் : சுகதேவ். நமது கடைசி விருப்பத்தை ஐயா கேட்கிருர், சொல்லப்பா. -