பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர சுதந்திரம் 173 காடெங்கும் கலவரம், தலைவர்கள் சிறையில் 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. பின்னணி : விடுதலை வந்தவுடன் அதைப் பெற்றுத் தந்த தளபதியை மறந்துவிட்டோம். மறந்தது மாத்திரமல்ல; தேசத் தந்தைக்கு உரிய நமது நன்றி யின் பரிசையும் கொடுத்து விட்டோம். சரித்திரம் மறவாத 1948 ஜனவரி 30. வெள்ளிக்கிழமை! விளக் கேற்றும் கேரம் கம்மையெல்லாம் மனிதர்களாக்கிய மகாத்மாவிற்கு காம் தந்த பரிசு மூன்று துப்பாக்கிக் குண்டுகள். அவர் நமக்கு உயிர் கொடுத்தார். காம் அவரது உயிரையே எடுத்துவிட்டோம். ஏகாதி பத்தியத்திற்கு அவர் கொடுத்த தொல்லைகளை ஐம்பது ஆண்டுகள் அங்கிய அரசாங்கம் பொறுத் துக் கொண்டது. ஆளுல் விடுதலை வந்த ஐந்து மாதங்கள் கூட மகாத்மா வின் சத்திய விரதத்தைப் பொறுத்துக் கொள்ள கம்மால் முடியவில்லை. அவரைக் கொன்றுவிட்டோம். வந்த விடுதலைக்கு வெள்ளி விழாவும் கொண்டாடிவிட்டோம். இன்றும் நாம் மகாத்மாவுக்கு ஒரு பெரும் பரிசைக கொடுத்துக கொண்டிருக்கிருேம். வரப்போகும் காட்சிகளில் இன்றைய சமுதாய கிழலைப் பார்த்து என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். |மேற்கண்ட பி T 6T ೯ಾಗಿ ಕಿ சம்பவங்களுக்கேற்ற ஸ்லைடுகளை பி ன் ன ரிை ப் படுதாவிலே போட வேண்டும்.) காட்சி முடிவு