பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 183 சோணு : சரி. வீதியிலே பேசினது போதும். மத்த விஷயங்களை நாளைக்கு வீட்டிலே பேசுவோம். ஒரு மனுசனை என் வீட்டுக்க வரச் சொல்லியிருக்கேன். நீங்கள் சென்றுவாருங்கள், பார்க்கலாம். (போகிருர்) சத்தியா : ஏங்க, மனுசனை வரச் சொல்லியிருக்கேன்னு சொல்லிட்டுப் போருரே. அப்ப நம்ம8ளயெல்லாம் என்னன்னு நினைச்சிட்டாரு? கத்தியா : அவர்மாதிரி மிருகமா கினேச்சுட்டாரோ என்னமோ? உத்தியா : மனுஷனே மண்ணு மலைன்னு கெனச்சோம் சரியான கல்லுமலை. கத்தியா : உம். காம அவ்வளவு இலேசிலே உட்டுடு வோமா? இந்தக் கல்லிலேயும் கார் உரிப்போம்! உத்தியா : இந்த ஆளைத் தலைவனுக்கி தெருத்தெருவா அலையவச்சி உருத்தெரியாமா குலேயவச்சி, பணத் தைக் கரைய வச்சு, உடம்பையும் குறைய வச்சாத் தான் நம்ம கூட்டணி நிம்மதியா இருக்க முடியும்: எப்படி என் எட்டு அம்சத்திட்டம்? சத்தி : கல்ல திட்டமய்யா! எதிரியை மட்டம் தட்டும் திட் டம். கான் சத்தி, இவர் கத்தி, நீர் சுத்தி இந்த முப்பெரும் புத்திசாலிகளாகிய நமது இயக்கமே ஒரு தத்துவப் பாசறை. இதிலே உண்டு பல அறை. அதிலே ஒரு குறை, கமது கறை. சரி வாரும். பேசா மல் காரியத்தில் இறங்குவோம். காட்சி முடிவு