பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 199 ஆசிரியர் : கந்தசாமி! (உரக்கக் கத் துகிருர்) கந்தசாமி : ஆ, அய்யா! நீங்களா! ஆசிரியர் : ஆம். நான்தானப்பா, நான்தான். உம், ஏன் யோசிக்கிருய்? கையிலிருக்கும் அந்த வெடிகுண் டையும் என்மேல் வீசு. இந்தச்சிலேயோடு என் உடம்பும் தூளாகி வெடிக்கட்டும். உன் மனம் குளி ரட்டும். உம். சீக்கிரம் செய். உ.ம்... - கந்தசாமி : அய்யா, அய்யா! ஆசிரியர் : கந்தசாமி! இச்செயல் கியாயமென்று நீ நினைத்தால் செய்து முடி. கந்தசாமி : இல்லை அய்யா. என் ஆசிரியர் தாங்கள். ஆசிரியர் : நான் உன் ஆசிரியர் என்ற எண்ணத்தில் கருணை காட்டுகிருயா தம்பி. இவர் யார்? உலகத் தின் பேராசிரியர் மானிடத்தின் மனேசாட்சி. இவர் சிலையை உடைக்கலாமா? கொடு அந்த வெடி குண்டை. (அப்போது சோணுசலத்தின் ஆட்கள் வந்து சந்த சாமியை அடி வெட்டு குத்து என்று கூறிக் கொண்டு அடிக்கிரு.ர்கள்.) ஆசிரியர் : (ஓடி வந்து) கில்லுங்கள் அவனே அடிக்கா தீர்கள்! அவனை நான் விசாரிக்கிறேன். தம்பி கந்த சாமி, கொடு அந்த வெடிகுண்டை. கந்தசாமி : அய்யா! நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஆசிரியர் : உம். நான் கேட்கிறேன், உன் ஆசிரியர் கேட்கிறேன். உத்தமரான உன் தந்தையின் உயிர் நண்பன் கேட்கிறேன். கொடு அதை.