பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 வீர சுதந்திரம் |வெடிகுண்டை பயந்து நடுங்கிய நிலையில் ஆசிரிய ரிடம் கொடுக்கிருன். ஆசிரியர் அதைத் தூரஎறி கிருர், அது வெடிக்கிறது) ஆசிரியர் : கந்தசாமி! இதுவே நீ செய்த முதல் வெடி குண்டு, இதுவே கடைசியாக இருக்கட்டும். இனி இத்தகைய கொடுமைகளுக்கு மனதைப் பறி கொடுக்காதே. கந்தசாமி : என்னே மறந்து மன்னித்துவிடுங்கள் அய்யா! சோன : பாத்தீங்களா? மகாத்மா சிலையை உடைக்க வந்ததும் இல்லாமே, மறக்கனும் மன்னிக்கனும்னு ஏதோ பேசருன்! கந்தசாமி : அய்யா! நான் சிஐலயை உடைக்க நினைத்த தற்கே இந்த மனித உருவங்கள்தான் அய்யா காரணம்! இனி இந்நாட்டிற்கு மகாத்மா தேவை யில்லே! வெடிகுண்டுதான் வேண்டும். ஆசிரியர் : இந்தப் பெருச்சாளிகளுக்குப் பயந்து பெரிய கோயிலேயே இடிக்க எண்ணலாமா தம்பி. கந்த : அய்யா இந்த ஊரில் இவர் ஒரு பெரிய மனிதர்! இவர் ஒரு அச்சுக்கூடம் வைத்திருக்கிருர். அதில் கள்ள கோட்டையும் அடிக்கிருர். காமக் கதைகளை யும் அடிக்கிருர். அதிலேயே காந்திப் படத்தையும் அச்சடிக்கிருர். அது தவறு என்று அச்சு யந்திரத் துக்கும் தெரியாது. இந்த மனித யந்திரத்துக்கும் தெரியாது. இல்லை-தெரிந்துகொள்ள மறுக்கிறது. இப்படி உலகை ஏய்க்கும் இவர்கள், மகாத்மாவின் புகழை மாய்க்கத் துணிந்து விட்டார்கள். இப்பேர்ப் பட்ட பாவிகள் வைக்கும் ტfმ%v தேவைதான அய்யா?